நமது வீட்டில் செல்வமானது சில சமயங்களில் ஏற்றத்துடனும், சில சமயங்களில் குறைவுடனும் இருக்கும். அதற்கு காரணம் பல இருந்தாலும் கூட, ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில பொருட்களை நமது வீட்டில் குறைவாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. சில பொருட்களை நம் வீட்டில் முழுவதுமாக தீர்ந்து போக விடாமல் அதனை அவ்வபோது வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நமது செல்வம் குறையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
1.)அரிசி மற்றும் உப்பு:
அரிசி மற்றும் உப்பு ஆகிய இரண்டுமே நாம் நமது பூமியிலிருந்து பெற்றுக் கொள்கிறோம். இந்தப் பொருட்கள் நமது வீட்டில் இல்லையேல் எவரது பசியையும் தீர்த்து வைக்க முடியாது. மேலும் இந்த பொருட்கள் தெய்வ கடாட்சம் நிறைந்த ஒரு பொருளாகவும் திகழ்கிறது. எனவே இந்த இரண்டு பொருட்களையும் நமது வீட்டில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக அரிசி மற்றும் உப்பினை வைத்து பயன்படுத்தக்கூடிய பாத்திரத்தினை காலியாக விடக்கூடாது. அது குறையும் முன்பே இந்த பொருட்களை வாங்கி விட வேண்டும். ஒருவேளை குறைவாக விட்டால் வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் செல்வ நிலை குறையும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
2.) குளியலறை பக்கெட்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி குளியல் அறையில் ஒருபோதும் வாளியில் நீரை காலியாக்கி வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் எதிர்மறை சக்திகள் நிரம்பும். எனவே குளித்த பின்னரும், துணிகளை துவைத்த பின்னரும் சிறிதாவது தண்ணீரை வாளியில் பிடித்து வைக்க வேண்டும். இதனால் உங்கள் வீட்டில் நிதி நெருக்கடிகள் குறைக்கப்படும் என நம்பப்படுகிறது.
3. பணப்பை:
இன்றைய உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் சேமிப்பு என்பது மிகவும் அவசியம். எனவே நாம் சம்பாதித்து வைக்கக்கூடிய பணப்பையில் குறைந்தபட்சம் ஓரிரு நோட்டுகளையாவது குறையாமல் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே வீட்டிலும் நமது சட்டையில் வைத்திருக்கக்கூடிய பணப்பையிலும் செல்வம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதனால் நேர்மறையான எண்ணம் நம்மை சுற்றி பரவும்.
4.) தண்ணீர் பானை:
நமது வீட்டில் நாம் குடிக்க பயன்படுத்தக்கூடிய குடங்களிலும், பூஜையறையில் நாம் பயன்படுத்தக்கூடிய தீர்த்த குடத்திலும் தண்ணீர் எப்பொழுதும் நிரப்பி வைக்க வேண்டும். பூஜை அறையில் நாம் எப்பொழுதெல்லாம் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோமோ அப்பொழுதெல்லாம் தண்ணீர் பானையில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். அதேபோன்று குடிநீர் குடத்திலும் தண்ணீர் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது நமது வாழ்க்கையில் பண பற்றாக்குறையை தீர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.