தெய்வீகம் நிறைந்த நறுமணம் நமது வீடுகளில் வீசும் பொழுது தீய சக்திகள் அழிந்து தெய்வ சக்திகள் நமது வீடு முழுவதும் பரவும் என்பது ஐதீகம். அத்தகைய தெய்வ சக்தியினை நமது வீடு முழுக்க பரவ வைக்க சாம்பிராணி தூபம் போடுவது தான் சிறந்த வழி என்பது நமது அனைவருக்கும் தெரியும். தினமும் நமது வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவதனால் ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள் பரவும். இதனால் புத்துணர்ச்சியுடன் நாம் அனைத்து செயல்களையும் செய்வோம். நமது உடல் நலத்திற்கும் அது நன்மையை தரும்.
சாம்பிராணி தூபத்தில் நமது உடல் நலத்திற்கு நன்மையை தரக்கூடிய பொருட்களையும், தெய்வீக நறுமணத்தை தரக்கூடிய பொருட்களையும் சேர்த்து நாம் நமது வீடுகளில் தூபம் போடுவோம். ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு விதமான பொருட்களை சாம்பிராணி தூபத்தில் போடுவதனால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம். இந்தக் கிழமையில் இந்த பொருளை தூபத்தில் போட்டுக் காட்டினால் நமக்கு நன்மை பயக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரங்கள் உள்ளது.
பொதுவாக சாம்பிராணி தூபம் என்பதனை ஒன்று அதிகாலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ தான் போட வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த சாம்பிராணி தூபத்தில் வெள்ளை குங்கிலியமும், வெண்கடுகும் சேர்த்து போட்டால் இன்னும் நமக்கு நன்மையை தரும். இவ்வாறு தூபம் போடுவது ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு விதமான பலன்களை தரும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று தூபம் போடுவதால் நம்முடைய ஆன்ம பலன் அதிகரிக்கும். செல்வாக்கும் புகழும் உயரும். மேலும் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
திங்கள் கிழமை அன்று தூபம் போடுவதால் நம்முடைய மனபலம் அதிகரிக்கும். மனம் அமைதி பெறும். மேலும் அம்பாலின் அருள் முழுமையாக கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமை அன்று தூபம் போடுவதால் எதிரிகள் தொல்லை முற்றிலும் நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் முற்றிலும் தீரும். அது மட்டும் அஞ்சி முருகப்பெருமானின் அருளும் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
புதன்கிழமை அன்று தூபம் போடுவதால் நமக்கு துரோகம் செய்பவர்கள் மற்றும் சூழ்ச்சி செய்பவர்கள் நம்மை விட்டு விலகுவார்கள். நாம் செய்யக்கூடிய வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். சுதர்சனரின் அருள் முழுமையாக கிடைக்கும்.
வியாழன் கிழமை அன்று தூபம் போடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். குரு பகவான் மற்றும் நமது முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு முழுமையாக கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று தூபம் போடுவதால் நமது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மேலும் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
சனிக்கிழமை அன்று தூபம் போடுவதால் சோம்பல் விலகும். மேலும் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதை ஆர்வத்துடன் செய்வோம். பெருமாளின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.