வாஸ்து பிரச்சினையை நீக்கும் வலம்புரிச் சங்கு!!!!

0
279

எந்த ஒரு வீட்டில் வலம்புரி சங்கு பூஜை அறையில் வைக்கப்பட்டிருக்கோ அந்த வீட்டினுல் குபேரன் அருள் பெற்று செல்வ செழிப்புடன் இருக்கும். மேலும் மகாலட்சுமி அந்த வீட்டினுள் நிரந்தர வசம் செய்வாள் என்பது ஐதீகம்.

வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பதிவில் காணலாம்

வலம்புரிச் சங்கில் நீர் (அதவது தீர்த்தம்) ஊற்றி அதில் துளசி இலையைப் போட்டு பூஜை செய்த பின்னர், அந்த தூயநீரை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வருகையில் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஆன்மிக ரீதியாக நம்பப்படுகிறது.

கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்தால்,108 சங்குகளின் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
வலம்புரி சங்கில் வைத்த தீர்த்தத்தைக் கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகையில் தோஷம் விமோசனம் பெறலாம்.

வாஸ்து பிரச்சனை உள்ள வீட்டிகளில் துளசி தீர்த்தத்தை அதாவது துளசியால் ஊறவைத்த நீரை வலம்புரிச் சங்கில் இட்டு,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வீட்டின் உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் தெளித்து வருகையில் வாஸ்து தோஷம் விலகி வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்களுக்கு,செவ்வாய் கிழமைகள் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்யது வருகையில் தோஷம் விலகி, திருமணம் கைக்கூடும்.

பவுர்ணமி நாட்களில் வலம்புரிச் சங்கிற்கு, குங்குமம் பொட்டு வைத்து அர்ச்சனை செய்து வருகையில் கடன் பிரச்சினைகள் தீரும்.இல்லையென்றால் வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட்டு வருகையிலும் கடன் பிரச்சினை தீரும்.

சுத்தமான, உண்மையான வலம்புரிச் கொண்டு வீட்டின் பூஜை அறையில் பூஜிக்கப்படும் பொழுது வீட்டில் உள்ள பில்லி, சூனியம், ஏவல்கள் விலகும். நம் இஷ்ட தெய்வத்திற்கு வலம்புரிச் சங்கால் ஒரு முறை அபிஷேகம் செய்தாலே, 10 மடங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறலாம்.

பிறந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்தால், வலம்புரிச் சங்கில் நீர் ஊற்றி, அதில் ருத்ராட்சம் இட்டு, அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட காய்ச்சல் நீங்கும்.

பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு, அதில் வலம்புரிச் சங்கை வைத்து பூ மற்றும் பொட்டு வைத்து வணங்கி வருவதினால் உணவு பஞ்சம் இருக்காது.

Previous articleதமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்
Next articleமோடி நகரில் வெடி விபத்து….?7 பேர் பலி….?நேரில் ஆய்வு செய்த முதல்வர்…?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here