இந்த உலகில் கடன் என்கின்ற பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது. எனக்கு எந்த கடனும் இல்லை என கூறுபவர்கள் மிக மிக குறைவாகவே இந்த உலகில் இருக்கின்றனர். ஆனால் இந்த கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் என்னதான் முயன்றாலும் அந்த கடனை அடைக்கவே முடியவில்லை. திரும்பத் திரும்ப ஏதேனும் ஒரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என கவலை கொள்கின்றனர். இந்த வழியில் சென்றால் நாம் கண்டிப்பாக கடனை அடைத்து விடலாம் என சென்றாலும் கூட அது பலனளிக்காமல் போய்விடுகிறது எனவும் வருந்தி வருகின்றனர்.
கடன் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கு செவ்வாய் கிழமைகளில் வழிபாடு செய்வதன் மூலம் சிறப்பு பலனை பெறலாம். அதாவது இந்த வழிபாடானது கடனை அடைப்பதற்கான வழியே தெரியாமல் எந்த வழியில் செல்ல வேண்டும் என தெரியாமல் இருக்கும் பொழுது இந்த வழிபாடு செய்வதன் மூலம் அதற்கான ஒரு சிறந்த வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனை நாம் பயன்படுத்திக் கொண்டு நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த வழிபாடானது நாம் கடனை அடைப்பதற்கு ஏற்படக்கூடிய தடைகளை நீக்கி கொடுக்கும்.
நாம் ஒருவரிடம் கடன் வாங்க வேண்டும் என்றால் அதனை திங்கள் கிழமையில் வாங்குவது நல்லது. அதே மாதிரி நாம் நமது கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் அதனை செவ்வாய்க்கிழமைகளில் கொடுப்பது மிகவும் சிறப்பு. செவ்வாய்க்கிழமைகளில் நாம் நமது கடனை கொடுத்து வந்தால் மென்மேலும் நமது கடன்களை முற்றிலும் அடைத்து விட முடியும். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது இந்த செவ்வாய் கிழமை.
செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஹோரை என்பது காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை இருக்கும். அந்த நேரத்தில் தான் நாம் வழிபாடுகளை செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை இந்த செவ்வாய் ஹோரையில் பாசிப்பயறு கொண்டு பாயாசம் செய்து அதனை நமது வீட்டில் உள்ள தெய்வத்திற்கு வைத்து தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். எனது கடனை அடைப்பதற்கான வழியை காட்டுங்கள் என்று நமது குலதெய்வம், இஷ்ட தெய்வம் ஆகியவற்றிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதே நாளில் மீண்டும் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை செவ்வாய் ஹோரை வரும். அந்த நேரத்தில் பசு மாட்டிற்கு உணவினை அளிக்க வேண்டும். பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பினை நன்றாக கழுவி விட்டு அதில் வெள்ளத்தினை சேர்த்து பசு மாட்டிற்கு யாரின் பேரில் அதிகம் கடன் வாங்கி இருக்கிறோமோ அவர்களது கையால் பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும். அவர் கொடுக்கும் பொழுது மனதார முப்பத்து முக்கோடி தேவர்களும் எனக்கு கடனை அடைப்பதற்கான வழியினை காட்டுங்கள் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதே நாளில் மூன்றாவது வழிபாடாக ஆறு மணிக்கு மேல் முருகருக்கு நெய் தீபம் ஒன்றை ஏற்றி எனது கடனை அடைப்பதற்கான வழியை காட்டுங்கள் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டினை கண்டிப்பாக செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய்க்கிழமை ஹோரையில் மட்டும்தான் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நம்மால் முடிந்தால் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களிலும் செய்யலாம்.