பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தி வருபவர்களா நீங்கள்!!ஒரு முறை இவ்வாறு பயன்படுத்திப் பாருங்கள்!!

Photo of author

By Janani

பச்சைக் கற்பூரத்தை பயன்படுத்தி வருபவர்களா நீங்கள்!!ஒரு முறை இவ்வாறு பயன்படுத்திப் பாருங்கள்!!

Janani

Are you using green camphor!! Try this once!!

பச்சைக் கற்பூரத்தை நாம் நமது வீடுகளிலும், கோவில்களிலும் பயன்படுத்தி வருகிறோம். ஒருமுறை இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள முறையில் பச்சைக் கற்பூரத்தை வைத்து வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் மட்டுமல்லாமல் மற்ற அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும். பச்சைக் கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த இடங்களில் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம்? என்பது குறித்த விளக்கத்தினை அறிந்து கொள்வோம்.
வாழ்க்கையில் எனக்கு வராத கஷ்டங்களே கிடையாது, அது மட்டுமின்றி பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்று ஒரு சில சூழ்நிலைகளில் நாம் அனைவரும் கூறுவோம். அத்தகைய சூழ்நிலையில் இந்த பச்சை கற்பூரத்தை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டின் மூலம் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நாம் சரி செய்ய முடியும். ஒரு செயலை செய்கின்ற பொழுது தடை ஏற்படுவது, பணக்கஷ்டம் ஏற்படுவது, கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது, உடல்நிலை சரியில்லாமல் போவது போன்ற அனைத்து விதமான பிரச்சினைகளும் இதனால் சரிவரும்.
வெளியில் இருக்கும் பொழுது மனநிலை நன்றாக உள்ளது. ஆனால் வீட்டிற்குள் இருக்கும் பொழுது மட்டும் ஒரு விதமான மன அழுத்தம், பயம் இதுபோன்ற உணர்வுகள் ஏற்படுகிறது என்றால் ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது சில்வர் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி கொண்டு அதில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை தூளாக்கி போட்டு விட வேண்டும். பின்னர் சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்த்து அதனை நமது வீட்டிற்கு வெளியே அல்லது மொட்டை மாடியில் இரவு முழுவதும் வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் காலையில் வாசல் தெளிக்கும் பொழுது அந்தத் தண்ணீரையும் ஊற்றி வாசல் தெளிக்க வேண்டும். தொடர்ந்து 48 நாள் இதே மாதிரி வாசல் தெளித்து வந்தால் நமது வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.
இந்த பச்சை கற்பூரத்தின் வாசனை நமக்குள் நேர்மறையான எண்ணங்களை பரவச் செய்யும். வாசல் இல்லாதவர்கள் வீட்டின் முன்புறம் மட்டும் அந்த தண்ணீரை சிறிதளவு தெளித்து விட வேண்டும். அதேபோன்று கணவன் மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றால் படுக்கை அறையில் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி வைத்து விட வேண்டும். அந்த வாசனையே அந்த அறையில் இருப்பவர்களின் மன அழுத்தத்தை குறைத்து விடும்.
இது ஒரு சிறிய செயல்தான் இருந்தாலும் இதனை செய்து பாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும். நாம் ஒரு செயலை செய்ய நினைக்கும் பொழுது அதில் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு கொண்டே இருக்கிறது அல்லது தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என எண்ணுபவர்கள் வெளியில் செல்லும் பொழுது நாம் நெற்றியில் வைத்துக் கொள்ளக்கூடிய திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவைகளில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை தூள் செய்து அதனுடன் கலந்து நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் காரிய வெற்றி அடையும்.
என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கூட வீட்டில் வறுமை இருந்து கொண்டே இருக்கிறது அல்லது ஏதேனும் ஒரு செலவு வந்து கொண்டே இருக்கிறது, என்னதான் முயன்றாலும் கடன்களை அடக்கவே முடியவில்லை என எண்ணபவர்கள் ஒரு சிறிய பச்சை நிற துணியில் இரண்டு ஏலக்காய், இரண்டு வெட்டிவேர், சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு அதனை கட்டி நாம் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். பச்சை நிறம் என்பது பணம் ஈர்ப்பு சக்தியை கொண்டது. எனவே இவ்வாறு செய்வதன் மூலம் வறுமை நம்மை விட்டு விலகும்.
இவை அனைத்துமே சிறிய சிறிய செயல்பாடுகள் தான். எனினும் பச்சை கற்பூரத்தில் உள்ள நேர்மறையான ஆற்றல்கள் நமக்கும் நமது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக இருக்கும்.