எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது!!ஆன்மீகம் சொல்லும் தகவல்கள்!!

Photo of author

By Janani

எந்தெந்த செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது!!ஆன்மீகம் சொல்லும் தகவல்கள்!!

Janani

Which plants should not be grown at home!! Spiritual information!!

மரம் மற்றும் செடிகளை வளர்ப்பது என்பது நமக்கும் சரி நமது சுற்றுச்சூழலுக்கும் சரி மிகவும் நன்மை வாய்ந்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் சில செடிகள் மற்றும் மரங்களை வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு வீட்டில் வளர்க்கக்கூடாத செடிகள் எவை எவை என்பது குறித்தும், அந்த செடிகளால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்தும் காண்போம். இதற்கு அறிவியல் ரீதியாகவும் ஆன்மிகம் ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன.
நமது வீட்டில் பல செடி மற்றும் மரங்களை வளர்ப்பதன் மூலம் ஒரு விதமான மனம் மகிழ்ச்சி ஏற்படும். அதேபோன்று நமக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை நமது வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமான உணவினை சாப்பிட முடியும். ஆனால் ஒரு சில செடிகளை வீட்டின் அருகில் வைத்து வளர்க்கக்கூடாது என வாஸ்து ரீதியாகவும், ஜோதிடம் ரீதியாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தச் செடிகளை நமது வீட்டில் வைத்து வளர்ப்பதன் மூலம் பல விதமான பிரச்சனைகள் நமது குடும்பத்தில் உண்டாகும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக முட்கள் இருக்கக்கூடிய செடிகளை நமது வீட்டில் வைத்து வளர்க்கக்கூடாது.
முட்கள் இருக்கக்கூடிய செடிகளை வளர்த்தால் அந்தச் செடியில் உள்ள முட்களால் நமது வீட்டு குழந்தைகளோ அல்லது வேறு யாரேனும் பாதிக்கப்படுவர். இதனால்தான் முட்கள் இருக்கக்கூடிய செடிகளை வளர்க்கக்கூடாது எனவும் அதே சமயம் வீட்டில் பலவிதமான பிரச்சனைகள் மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும் எனவும் ஆன்மீகம் ரீதியாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு சில செடிகளை நாம் ஆசையாகவும் வீட்டின் அழகுக்காகவும் வைத்து வளர்த்து வருவோம். ஆனால் நோய் தாக்குதல் காரணமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோ அந்த செடி பட்டு போயிருந்தால் அதனை உடனடியாக அகற்றி விட வேண்டும். எவ்வாறேனும் அந்த செடியை காப்பாற்ற முடியுமா என்று நாம் பல நாட்கள் நமது வீட்டிலேயே வைத்து பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அவ்வாறு பட்டுப்போன செடிகளை நமது வீட்டில் வைத்திருக்கக் கூடாது.
நாம் நமது வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவோம். அந்த துளசி மாடத்தினை மிகவும் பக்தியாக வழிபட வேண்டும். அதன் அருகில் எந்தவித தீட்டும் அல்லது குப்பைகளையோ சேர விடக்கூடாது. வில்வ மரத்தினை நமது வீட்டின் அருகில் வைக்க கூடாது என்கிறார்கள். ஏனென்றால் வில்வம் மரம் சிவபெருமானுக்கு உரிய மரம் எனவே அந்த மரத்தினை வைக்கும் பொழுது மிகவும் சுத்தபத்தமாகவும், பக்தியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்தியான முறையில் வில்வ மரத்தினை வளர்ப்பதாக இருந்தால் மட்டுமே வீட்டின் அருகே வைக்க வேண்டும்.
புளிய மரத்தினை வீட்டின் அருகில் வளர்க்கக்கூடாது. ஏனென்றால் இந்த மரம் மிகவும் பரந்து மற்றும் ஆழமாகவும் வளரக்கூடியது. இதனால் நமது வீடு பாதிப்புக்கு உள்ளாகும். மேலும் இந்த மரம் எதிர்மறையான ஆற்றல்களையும் உண்டாக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோன்று பருத்திச் செடி மற்றும் அகத்தி மரத்தினையும் வீட்டின் அருகில் வளர்க்கக்கூடாது.
அதேபோன்று பனைமரம் மற்றும் நாவல் மரத்தினையும் வீட்டின் அருகில் வளர்க்கக்கூடாது. ஏனென்றால் நாவல் மரம் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிகளையும், மற்ற பூச்சிகளையும் ஈர்க்கக் கூடியது. எனவே இந்த மரம் நமது வீட்டின் அருகில் இருக்கும் பொழுது அந்த பூச்சிகள் நமது வீட்டிற்குள்ளேயும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அத்தி மரத்தினையும் நமது வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது. ஏனென்றால் அத்திப்பழம் வௌவால்களுக்கு மிகவும் பிடித்த பழம். எனவே அதிகப்படியான வௌவால்கள் அந்த மரத்திற்கு வரும். இது நமது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
ஒரே ஒரு ஆண் குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் கருவேப்பிலை மரத்தினை வீட்டிற்கு அருகில் வளர்க்கக்கூடாது என ஆன்மீகம் ரீதியாக கூறப்படுகிறது. உடனே காய்ந்து விடக்கூடிய அல்லது காய்ந்த தன்மையுடனே பூக்கக்கூடிய சில பூச் செடிகளை வீட்டிற்குள் வைக்கக் கூடாது. அதாவது காகிதப்பூ போன்ற பூச்செடிகளை வைக்கக்கூடாது. ஏனென்றால் இவை எதிர்மறையான ஆற்றல்களை உருவாக்கும்.