மிதுனம் ராசியானது இத்தனை காலங்கள் வரை அனைத்திலுமே கஷ்டங்கள் மற்றும் துன்பங்களை அனுபவித்து வந்தனர். ஆனால் தற்போது நடக்க விருக்கக்கூடிய குரு பெயர்ச்சியானது அனைத்து விதத்திலும் சிறந்த பலன்களை தரக்கூடியதாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதிற்கு ஏற்ப அனைத்திலும் நன்மைகள் ஏற்படும். இந்த குரு பெயர்ச்சியினால் ஒரு வருட காலம் மிதுன ராசிக்கு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து காண்போம்.
குருபகவான் மிதுனம் ராசியினை ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் இடங்களில் இருந்து பார்க்க இருக்கிறார். எனவே தொட்டது அனைத்தும் துலங்கும் காலமாக இந்த குரு பெயர்ச்சி காலம் இருக்கும். இந்த குரு பெயர்ச்சி ஆனது அவர் இருக்கக்கூடிய இடத்தினை விட அவர் பார்க்கக்கூடிய இடத்திற்கு சிறந்த பலன்களை தரப் போகிறார். ஐந்தாம் இடத்தில் இருந்து மிதுனம் ராசியினை குரு பகவான் பார்ப்பதினால் அறிவு, புத்தி, பணம், மனவலிமை ஆகிய அனைத்துமே சிறந்து விளங்கும்.
அதேபோன்று குரு பகவான் ஏழாம் இடத்திலிருந்தும் மிதுனத்தை பார்ப்பதினால் காதல் கைகூடி வரும். அதே சமயம் திருமணம் ஆகாதவர்களுக்கும் திருமணம் நடைபெறும். அதுமட்டுமல்லாமல் தொழிலிலும் உயர்ந்த பதவி, அந்தஸ்து போன்றவைகளும் கிடைக்கும். நல்ல பெயரும், புகழும், செல்வாக்கும் கிடைக்கக்கூடிய காலமாக இனி வரக்கூடிய காலம் அமையும். மகிழ்ச்சி, ஆரவாரம், பூரிப்பு ஆகிய அனைத்தும் நடக்கும். மேலும் சிறப்பான குடும்ப வாழ்க்கையும் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஏற்றத்தை தரக்கூடிய காலமாகவும், அதிர்ஷ்டத்தை தரக்கூடிய காலமாகவும் விளங்கும். கடந்த ஐந்து வருடங்களாக இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி வாழ்க்கையில் ஒரு ஒளியை தரக்கூடிய காலமாக மிதுனத்திற்கு வரப் போகிற மார்ச் 29 ஆம் தேதிக்கு பிறகு அமையும். அதேபோன்று அக்டோபர் மாதத்திலும் பணவரவு அதிகரித்து இருக்கும். தொழில் புரிபவர்களுக்கும் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் டிசம்பர் மாதத்திற்கு பிறகு உடல் நிலையில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவுகளிடமும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.
திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், ஆலங்குடி போன்ற கோவில்களுக்கு சென்று வருவதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம். அதேபோன்று ஏதேனும் வேண்டுதல்கள் வைத்தால் அதனை நம் கையாலே செய்து கோவில்களுக்கு வழங்க வேண்டும். உதாரணமாக சுண்டல் மாலை அணிவிப்பதாக இருந்தால் சுண்டலை நமது வீட்டிலேயே ஊற வைத்து அதனை கோவிலுக்கு எடுத்துச் சென்று நமது கையாலே கோர்த்து சாமிக்கு போட வேண்டும். கடைகளில் விற்கக்கூடிய சுண்டல் மாலைகளை வாங்கக்கூடாது. இந்த குரு பெயர்ச்சி காலமானது மிதுனம் ராசிக்கு மிகச்சிறந்த காலமாக, மிகுந்த ஏற்றத்தை தரக்கூடிய காலமாக அமையும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு மட்டும் சற்று அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.