நமது வீட்டில் தீர்க்க முடியாத கஷ்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் ஏதேனும் ஒரு செயலை செய்திருப்போம் அல்லது ஏதேனும் ஒரு அதிர்ஷ்டம் இல்லாத பொருளை வாங்கி இருப்போம். பிறர் தானமாக ஒரு பொருளை கொடுத்தால் வாங்கலாம்.ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை வாங்க கூடாது என்ற நியதி உள்ளது. அதேபோன்று ஒரு சில பொருட்களை எந்தந்த நேரங்களில் வாங்க கூடாது என்ற நியதியும் உள்ளது. அவ்வாறு வாங்கும் பொழுதும் நமது வீட்டில் பிரச்சனைகள் ஏற்படும்.
நமது வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியான ஒரு சூழல் இருந்து கொண்டிருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கிய பிறகு அந்த நிம்மதி இல்லாமல் போவது ஒரு சிலர் உணர்ந்திருப்போம். அவ்வாறு எந்த பொருளை வாங்க கூடாது என்பது குறித்து காண்போம்.
வெள்ளிக்கிழமை நாளன்று வெள்ளை நிற பொருட்களை யாருக்கும் தானமாக கொடுக்கக் கூடாது. அதாவது வெள்ளை நிறமான தேங்காய், அரிசி, பால், கல் உப்பு, தயிர் போன்ற பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது. அதேபோன்று சனிக்கிழமை நாட்களில் இரும்பினால் ஆன பொருட்களை வாங்க கூடாது. அதாவது கரண்டி, தோசைக்கல் போன்ற எந்த வித பொருட்களையும் சனிக்கிழமை நாட்களில் வாங்க கூடாது. துடைப்பம், கூடை போன்றவற்றையும் சனிக்கிழமை நாட்களில் வாங்க கூடாது. அதே சமயம் பழைய துடைப்பதினையும் வீட்டை விட்டு வெளியே தூக்கி போடக்கூடாது.
கோவில் மற்றும் நமது வீடுகளில் ஏற்றக்கூடிய தீபம் மற்றும் கற்பூரத்தினை மற்றவர்களிடமிருந்து தீப்பெட்டியை கடன் வாங்கியோ அல்லது மற்றவர் ஏற்றியிருந்த தீபத்தின் மூலமோ நமது தீபத்தினை ஏற்றக்கூடாது.
ஒருவர் ஏழ்மையில் இருக்கும் பொழுது வசதி உள்ளவர்கள் புதிய செருப்பினையோ அல்லது பயன்படுத்திய பழைய செருப்பினையோ தானமாக வழங்குவார்கள். அவ்வாறு தானமாக வழங்கக்கூடிய செருப்பினை நாம் எந்த காரணத்தை கொண்டும் வாங்க கூடாது. அது புதிய செருப்பாகவே இருந்தாலும் சரி தானமாக கொடுக்கக்கூடிய செருப்பினை நாம் வாங்கினால் தீராத கஷ்டம் நம்மை வந்து சேரும்.
கோவிலில் தரக்கூடிய திருநீறினை நாம் பூசாரியின் கையினால் மட்டுமே வாங்கிக் கொள்ள வேண்டும். கோவிலில் மிகவும் அதிகமான கூட்டம் இருந்தாலும் கூட மற்றவர் வாங்கிய திருநீறினை நாம் வாங்கி இடக்கூடாது. அதேபோன்று கோவிலில் தரக்கூடிய பிரசாதத்தினை நாம் கோவிலில் அமர்ந்து உண்போம் அல்லது வீட்டிற்கு எடுத்து வந்து உண்போம். அவ்வாறு கோவிலில் பிரசாதமாக தரக்கூடிய கொள்ளு பிரசாதத்தினை கோவிலில் மட்டுமே அமர்ந்து உண்ண வேண்டும். அதனை வீட்டிற்கு ஒருபோதும் எடுத்துச் செல்லக்கூடாது.
நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய புளியினை ஒருபோதும் இலவசமாக வாங்க கூடாது.புளியை வாங்குகிறோம் என்றாலே அதனை நாம் பணம் கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். தெரிந்தவர்கள், உறவினர்கள், பெற்ற தாய் ஆகியோரிடம் இருந்தும் கூட தானமாக புளியினை நமது வீட்டிற்கு வாங்கி வரக்கூடாது.
மிளகாய் தூள் மற்றும் நமது தலைக்கு குளிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய சீகக்காய் தூள் போன்றவற்றை மற்றவர்களிடம் இருந்து தானமாக வாங்க கூடாது. உறவினர்களாக இருந்தாலும் கூட நம்மால் முடிந்த அளவு பணத்தை கொடுத்துவிட்டு தான் அந்தத் தூளை வாங்க வேண்டும். அம்மா வீட்டில் இருந்து மட்டும் இலவசமாக நமது வீட்டிற்கு எடுத்து வரலாம். ஆனால் மற்ற உறவினர்களிடமிருந்து இதனை இலவசமாக வாங்க கூடாது.