உங்களின் இஷ்ட தெய்வமாக விநாயகரை வணங்குபவரா நீங்கள்!!அப்பொழுது பிள்ளையாருக்கு இதனை வைத்து வழிபடுங்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டம் உண்டாகும்!!

Photo of author

By Janani

உங்களின் இஷ்ட தெய்வமாக விநாயகரை வணங்குபவரா நீங்கள்!!அப்பொழுது பிள்ளையாருக்கு இதனை வைத்து வழிபடுங்கள் கண்டிப்பாக அதிர்ஷ்டம் உண்டாகும்!!

Janani

Do you worship Lord Ganesha as your favorite deity?

நமது வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள், கஷ்டங்கள், இன்பமில்லா வாழ்க்கை இருந்தாலும் கூட அதனை இன்பமயமாக்க ஒரு எளிய பூஜை வழிபாட்டு முறையினை செய்யும் பொழுது கண்டிப்பாக நமது வாழ்க்கை மாறும். இறைவன் என்பவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கிறார். எனவே நாம் முழு மனதோடும், நம்பிக்கையோடும் இறைவனை வழிபட வேண்டும். எவ்வளவு தான் பூஜை செய்து வழிபட்டாலும் நம்மிடம் நம்பிக்கை இல்லாமல் போனால் அந்த வழிபாடு நமக்கு பலனை தராது. நம்பிக்கை இல்லாமல் செய்கின்ற ஒரு செயலானது நமக்கு எப்பொழுதும் முரண்பாடாகவே வந்து அமையும்.
எனவே முழு மனதுடன் ஒரு வழிபாட்டினை செய்யும் பொழுது அதுவே நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தூண்டி நம்மிடம் நேர்மறையான ஆற்றல்களை பரவச் செய்யும். நம் மனதில் நினைத்த காரியத்தை தைரியமாக செய்வதற்கான ஆற்றலும் கிடைக்கும். நமக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்கின்ற சமயத்தில் பிள்ளையாரை நினைக்கும் பொழுது கண்டிப்பாக அந்த பிரச்சனை அகற்றப்படும். எனவேதான் முழு முதல் கடவுளாக அனைத்து கோவில்களிலும் பிள்ளையாரே முதல்வராக திகழ்கிறார்.
மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி என்பது கண்டிப்பாக வரும். அந்த நாட்களில் நம்மால் முடிந்த அளவிற்கு வாழைப்பழங்களை வாங்கி மற்றவர்களுக்கு தானமாக தருவது சிறந்த பலன்களை அள்ளித்தரும். சங்கடஹர சதுர்த்தி என்றாலே நமது சங்கடங்களை அகற்றி தருபவர் என்பதே பொருள். சங்கடஹர சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு தேங்காய் பழம் உடைத்து வழிபாடு செய்து விட்டு நம்மால் முடிந்த அளவில் வாழைப்பழங்களை வாங்கி மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.
விநாயகரின் விக்கிரகம் உங்கள் வீட்டில் இருந்தால் அதனை பச்சரிசியின் மேல் வைத்து பிள்ளையாருக்கு முன்பு ஒரு மஞ்சளை வைத்து வழிபடுவதன் மூலம் நமக்கு நல்ல பலன்களை தருவார். அதேபோன்று நமது வீட்டில் அதிகப்படியான பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது என்றால் நீரில் பச்சை கற்பூரத்தை தூவி விட்டு அதன் மேல் பிள்ளையார் விக்கிரகத்தை வைத்து வழிபடுவதன் மூலம் பிரச்சனைகள் அனைத்தும் அகற்றப்படும். ஆனால் தினம் தினம் அந்த நீரினை மாற்றி விட வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் செய்து அருகம்புல் வைத்து தொடர்ந்து 48 நாட்கள் வழிபாடு செய்த பின்னர் அந்த 48 பிள்ளையாரையும் நீர் நிலையங்களில் கரைத்து விடுவதன் மூலம் நமது பிரச்சனைகள் அனைத்தும் கரைந்து ஓடிவிடும். நாம் தூங்கும் முன்பு நமது தலையணைக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து படுத்து உறங்கி விட்டு அதனை மறுநாள் காலையில் எடுத்து ஒரு உண்டியலில் போட்டு விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்த பின்னர் உண்டியலில் உள்ள 48 ரூபாய் இணையும் கோவில் உண்டியலில் போட்டு விடுவதன் மூலம் நமது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.
ஒரு ரூபாய் நாணயத்தினை ஒரு மஞ்சள் துணியில் கட்டி நமது வேண்டுதலை மனதில் நினைத்து மாரியம்மன் கோவிலில் அதனை செலுத்தி விடுவதன் மூலம் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இவை அனைத்தையும் முழு நம்பிக்கை யுடனும், பக்தியுடனும் செய்யும்பொழுது அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.