உங்கள் பெண்ணிற்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பலவிதமான நட்சத்திரங்களை கொண்ட வரன்கள் வந்திருக்கும். அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு ஜாதகத்தினையும் ஜாதகரிடம் கொண்டு சென்று பார்க்க வேண்டி இருக்கும். உங்கள் பெண் நட்சத்திரத்திற்கு ஏற்ற ஆண் நட்சத்திரம் எது என்பதனை தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்ப பொருத்தமான ஜாதகத்தினை மட்டுமே எடுத்துச் சென்று ஜாதகரிடம் பொருத்தத்தினை பார்த்துக் கொள்ளலாம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன அவற்றுள் முதலாவது நட்சத்திரம் அஸ்வினி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் அவருக்கு பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும்.
பரணி நட்சத்திரத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் அவருக்கு புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வினி போன்ற நட்சத்திரங்கள் பொருந்தும். கார்த்திகை ஒன்றாம் பாதம் நட்சத்திரம் கொண்ட பெண்ணிற்கு சதயம் நட்சத்திரம் மட்டுமே பொருந்தும். கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் அவருக்கு சதயம் நட்சத்திரம் மட்டுமே பொருந்தும்.
ரோகினி நட்சத்திரத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதம், புனர்பூசம் 4 ஆம் பாதம், உத்திரம் 1 ஆம் பாதம், பூரட்டாதி, பரணி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும். மிருகசீரிஷம் 1,2 ஆம் பாதத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் உத்திரம் 1, உத்திராடம் 2 3 4, திருவோணம், சதயம், அஸ்வினி, ரோகினி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும்.
மிருகசீரிஷம் 3 4 ஆம் பாதத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2 3 4, சதயம், பரணி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும். திருவாதிரை நட்சத்திரத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3 4 ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும்.
புனர்பூசம் 1 2 3 ஆம் பாதத்தில் உங்கள் பெண் பிறந்திருந்தால் அவிட்டம் 3 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3 4 ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும். புனர்பூசம் 4 ஆம் பாதத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் பூசம், சுவாதி, அவிட்டம் 1 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும்.
பூசம் நட்சத்திரத்தில் உங்கள் பெண் பிறந்து இருந்தால் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1 2 3, பூரட்டாதி 4, ரேவதி திருவாதிரை, புனர்பூசம் ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும். ஆயில்யம் நட்சத்திரத்தில் உங்கள் பெண் பிறந்திருந்தால் சித்திரை, அவிட்டம் 1 2 ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தும்.