ஒருவர் அவரது வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு படி மேலே உயரும் பொழுதே எதிரிகள் உருவாகி விடுகின்றனர். அதாவது தன்னைவிட யாரும் சற்று உயர்ந்து விடக்கூடாது என எண்ணுபவர்கள் இந்த உலகில் அதிகம். அந்த எதிரிகள் அவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு என செய்வினை, பில்லி, சூனியம் போன்றவற்றை செய்து வைத்து விடுகின்றனர். இவ்வாறு செய்வது எல்லாம் உண்மையா? அவ்வாறு நமக்கு செய்து விட்டால் அதனை கண்டுபிடிக்க முடியுமா? என்பது குறித்து தான் தற்போது காண்போம்.
தெய்வத்தின் பார்வை நம் மீது இருக்கிறது, நாம் எந்தவித தவறும் செய்யவில்லை என்கின்ற பொழுது நமக்கு வைக்கின்ற செய்வினையை அந்த தெய்வம் காட்டி கொடுத்து விடும். நமக்கு யாரேனும் ஒருவர் செய்வினை வைத்து விட்டால் அதன் விளைவு அன்று இரவு அல்லது அடுத்த நாளே நமக்கு தெரிந்துவிடும். நமக்கு யாரோ ஒருவர் செய்வினை வைத்துள்ளார் என்பதை தெரிந்து கொண்ட பின்பு, அது யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு நமக்கு உதவியாக இருப்பது நமது குலதெய்வம் மட்டுமே.
நாம் தெய்வத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டு வழிபட்டு வருகிறோம் என்றால், நமக்கு யாரேனும் ஒருவர் செய்வினை வைக்க வந்தால் அதனை நமக்கு கனவின் வாயிலாக காட்டிக் கொடுத்து விடும். தெய்வத்தின் மீது உண்மையான அன்பு, நம்பிக்கை, பக்தி ஆகிய அனைத்தும் இருந்தால் மட்டுமே நம்மால் அதனை அறிய இயலும். அதாவது கனவில் ஏதேனும் கெட்ட சகுனங்கள் வருவது போன்றோ அல்லது ஒரு சிலருக்கு யார் வைக்கப் போகிறார் என்பது குறித்தும் கூட தெய்வம் நமது கனவில் காட்டிக் கொடுத்து விடும்.
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே நமது குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று குலதெய்வத்திற்கான நெய்வேத்தியம், விருந்து, விசேஷம் செய்வது போன்ற அனைத்தையும் நாம் தவறாமல் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த தெய்வத்தின் குழந்தைகளாகிய நம்மளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். குலதெய்வ கோவிலுக்கு மாதம் ஒரு முறையேணும் சென்று விளக்கேற்றி வழிபட வேண்டும். நமக்கு கஷ்டம் ஏற்படுகிற பொழுது மட்டும் நமது தெய்வத்தினை காண செல்லக்கூடாது. அனைத்து நேரங்களிலும் நமது தெய்வத்தை ஞாபகம் வைத்து மனதார வழிபட்டு வர வேண்டும்.
அப்பொழுதுதான் எந்த ஒரு தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் நமது தெய்வம் காத்துக் கொள்ளும். அது மட்டுமின்றி நமது வாழ்க்கை முன்னேற்றத்தை கொடுக்கக் கூடியதும் நமது குலதெய்வம் தான். கோவிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் நமது குலதெய்வத்தின் படத்தை நமது பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டு வந்தால் குலதெய்வத்தின் அருள் நமக்கு நிச்சயம் கிடைக்கும்.