சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா!!சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Janani

சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா!!சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்!!

Janani

Can a child be born in the month of Chitra!! People born in the month of Chitra must know this!!

பொதுவாகவே நமது நாட்டில் ஒரு குழந்தை இந்த மாதத்தில் பிறந்தால் இந்த குணத்தில் தான் இருக்கும், இவ்வாறு தான் அவர்களின் வாழ்க்கை முறை அமையும் என்பதை கணக்கிடுவது போன்ற வழிமுறை உள்ளது. அதேபோன்று இந்த சித்திரை மாதத்தில் ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தாலே ஒரு வித பயம் பெற்றோர்களிடம் இருக்கும். ஏனென்றால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்ற ஒரு செய்தியை அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். உண்மையிலேயே சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க கூடாதா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தற்போது காண்போம்.
முந்தைய காலங்களிலும் தற்போதைய காலங்களிலும் ஆடி மாதத்தில் புதிய கணவன் மனைவியை இணைந்து இருக்க விட மாட்டார்கள். இதற்கு காரணமும் ஆடி மாதத்தில் ஒன்று சேர்ந்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் தான். அதிலும் சித்திரை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் தந்தைக்கு ஆகாது எனவும் கூறி வருகின்றனர். இது அனைத்தும் முற்றிலும் தவறான கருத்து ஆகும். ஏனென்றால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால், அந்த மாதத்தில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். அந்த தாக்கத்தினை குழந்தையால் தாங்க முடியாது என்பதால் தான் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்று கூறுவர்.
அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பொழுது குழந்தை பிறந்தால் அது குழந்தைக்கும், தாய்க்கும் மிகுந்த சிக்கலை ஏற்படுத்தி விடும். சித்திரை மாதத்தில் ஏற்படக்கூடிய இந்த உஷ்ணத்தின் காரணமாகவே சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்று கூறுவர். இப்பொழுது உள்ளது போல ஏசி எதுவும் முந்தைய காலங்களில் கிடையாது. இதனால் தான் நமது முன்னோர்கள் சாதாரணமாக சொன்னால் மக்கள் கேட்க மாட்டார்கள் என்பதால், இதுபோன்ற விஷயங்களை கூறி புதிய கணவன் மனைவிகளை பிரித்து வைத்துள்ளனர்.
சித்திரை மாதத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது ராமபிரானின் மறு உருவமாகவே திகழும். ராமனை போன்று அறிவு, ஆற்றல், அழகு, வீரம், மதிநுட்பம் ஆகிய அனைத்தும் சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு இருக்கும். சித்திரை மாதத்தில் பிறந்த பெண் குழந்தைகளும் இத்தகைய திறன்களை கொண்டிருப்பார்கள். முந்தைய காலங்களிலும், தற்போதைய காலங்களிலும் ஒரு சிலர் பெண் என்பவள் அடங்கி இருக்க வேண்டும் என்றே நினைப்பர். ஆனால் இந்த சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி வீரத்திலும் பேச்சிலும் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். சித்திரை மாதத்தில் பிறந்த பெண்கள் எந்த ஒரு செயலிலும் மிகுந்த தைரியத்துடனும், வீரத்துடனும் செயல்படுவார்கள் எனவேதான் சித்திரை மாதத்தில் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறக்கக் கூடாது என்றும் கூறி வந்தனர்.
இதனால்தான் சித்திரை மாதத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யவும் யோசித்து வந்தனர். இதனைப் போன்று தான் எந்த மாதமாக இருந்தாலும் சரி வெள்ளிக்கிழமைகளில் ஆண் குழந்தை பிறக்கக் கூடாது என்பதற்காக முந்தைய தினமான வியாழன் கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். இவை அனைத்திற்கும் சாஸ்திரம் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இவை அனைத்துமே ஒரு விதமான மூட நம்பிக்கைகள் மட்டுமே. எந்தக் கிழமை மற்றும் எந்த மாதத்தில் பிறந்தாலும் அனைத்து குழந்தைகளும் சிறப்பான குழந்தைகளாகவே வளருவார்கள்.