செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

Photo of author

By Janani

செய்வினை செய்தவருக்கே திருப்பி அனுப்ப இவ்வாறு செய்து பாருங்கள்..!! நிச்சயம் பலன் கிடைக்கும்..!!

Janani

வாழ்க்கையானது நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஒரு திருப்பு முனையாக ஏதேனும் ஒரு வீண் விரயங்கள் அதாவது நாம் வற்றாத செல்வத்தைக் கொண்டிருந்தால் அதனை தீர்ப்பதற்கு என செய்வினை வைத்திருப்பார்கள். அதுபோன்று குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால், குடும்பம் மகிழ்ச்சி சிதைய வேண்டும் என்று நமது உறவினர்களோ அல்லது ஊரில் உள்ளவர்களோ செய்வினை வைத்திருப்பார்கள். உடல்நிலை சரியில்லாமல் போக வேண்டும், குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகி கொண்டே இருக்க வேண்டும் எனவும் நம்மை பிடிக்காதவர்கள் செய்வினை வைத்திருப்பார்கள்.

இந்த பிரச்சனைகள் ஒரு சில நேரங்களில் சாதாரணமாக ஏற்பட்டு விரைவில் சரியாகிவிடலாம். ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது, மிகவும் ஆபத்தான நிலைக்கு நம்மை தள்ளுகிறது என்றால் கண்டிப்பாக யாரேனும் ஒருவர் உங்களுக்கு செய்வினை வைத்திருப்பார்கள். இவ்வாறு நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்கள் என்று எண்ணினாலோ அல்லது செய்வினை வைத்தது உறுதி செய்து, அது யார் என்று தெரிந்தாலோ அந்த செய்வினை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், அந்த பாதிப்பு அவர்களிடமே திரும்பி செல்லும்படி செய்யலாம்.

அதற்கு ஒரு எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு வந்த செய்வினை வைத்தவருக்கே திருப்பி அனுப்பப்படும். இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவதால் நமக்கு செய்வினை வைத்தவருக்கு, நாம் இந்த பரிகாரத்தை செய்த ஒன்பது நாட்களில் உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தி விடும். நமக்கு செய்வினை வைத்தது யார் என்று தெரிந்தாலும் அல்லது தெரியாமல் இருந்தாலும் கூட, இந்த பாதிப்பு அடைந்தவர்களை கண்டு நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நமக்கு செய்வினை வைத்தது யார் என்பதை நமது கண் முன்னே அது காட்டியும் கொடுத்துவிடும். இந்த பரிகாரத்தினை செய்வதற்கு ஒரு கோழி முட்டை, எலுமிச்சம் பழம், கரு ஊமத்தங்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மூன்று பொருட்களிலும் நமக்கு யார் செய்வினை வைத்தாரோ அவரின் பெயரை எழுதிக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அதனை நமது தலையை சுற்றி முச்சந்தியில் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தினை செவ்வாய்க்கிழமை மற்றும் மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒன்றாக சேர்ந்து வரக்கூடிய நாட்களில், மதியம் ஒரு மணி அல்லது இரவு ஒரு மணி ஆகிய நேரங்களில் செய்ய வேண்டும். இந்தக் கிழமை, நட்சத்திரம் மற்றும் நேரம் ஆகியவற்றில் இந்த பரிகாரத்தை சரியாக செய்யும் பொழுது கண்டிப்பாக அதற்கான பலன் நமக்கு கிடைக்கும். மேலும் அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் செய்வினை வைத்தவருக்கே திருப்பி அனுப்பப்படும்.

நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருந்தால் அதற்காக அதிக பணம் செலவிட வேண்டும் அல்லது பூஜைகள் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் அதற்கான பலனை நமது கண்கூடாக நிச்சயம் காணலாம்.