நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!

Photo of author

By Janani

நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!

Janani

அழுகை என்பது மனிதனுக்கு பொதுவான ஒரு விஷயம் தான். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆனால் ஏதேனும் ஒரு சோகமான விஷயத்தை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களுக்கு அழுகை வருகிறதா? யாரேனும் உங்களுடைய குணத்தையோ செயலையோ குறையாக சொல்லும் பொழுதோ அல்லது குறையாக பார்க்கும் பொழுதோ உங்களுக்கு அழுகை வருகிறதா? அப்போ இந்த சமுதாயத்தில் அழுகின்ற உங்களை பலவீனமானவர் என்றும், அழாமல் இருப்பவர்களை உறுதியானவர்கள் என்றும் கூறுகின்றனர்.  

ஆனால் உண்மையிலேயே உளவியல் ரீதியாக, அழுகின்றவர்களுக்கு சிறப்பான குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அழுகாதவர்களை காட்டிலும் இவர்கள் பல்வேறு வகையில் உயர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஐந்து விதமான குணங்கள் இவர்களிடம் இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆய்வுகளின் படி பெண் என்பவள் மாதத்திற்கு மூன்று அல்லது ஐந்து முறை அழுவதாகவும், ஆண்கள் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது அழுவர் என்றும் கூறப்படுகிறது.

1. உளவியல் ரீதியாக அழக் கூடிய மனிதர்கள் அவர்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ற பதில்களை கொடுக்கின்றனர். எனவே அவர்கள் ஆகச் சிறந்த மனிதர்கள் என்றும் கூறுகின்றனர். அழுவது என்பது கேவலமானதோ அல்லது பலவீனமானதோ கிடையாது, அவர்கள் அவர்களின் உணர்ச்சிகளுக்கு தக்க பதிலை கொடுக்கின்றனர்.

2. நாம் அழும் பொழுது நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நமக்கு அதிகப்படியான மன அழுத்தம் இருக்கும் பொழுது அழுதுவிட்டால் அது சற்று குறைந்து விடும். ஆனால் அழாமல் அப்படியே மன அழுத்தத்துடன் இருந்தால் இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் இது போன்ற பலவிதமான நோய்கள் நமது உடலில் ஏற்படலாம்.

3. அழக்கூடிய மனிதர்களுக்கு உணர்ச்சி ரீதியான நுண்ணறிவு அதிகமாக இருக்கும். ஒருவர் பேசினால் மட்டுமல்ல பேசாமல் இருந்தாலும் கூட, அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

4. அழக்கூடிய மனிதர்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களிடம் மனிதநேயம் மற்றும் இறக்க குணம் அதிகமாக இருக்கும். தோழமைப் பண்பும் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

5. அதிகம் விசுவாசம் உடையவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். பாசம், அன்பு, காதல் ஆகிய அனைத்தும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.

எவர் ஒருவர் நான் அழ மாட்டேன் அழுததும் கிடையாது என்று கூறுகிறாரோ, அவர்கள் உண்மையிலேயே தைரியமானவர்கள் கிடையாது. அவர்களிடம் மன அழுத்தமும் அதிகமாக இருக்கும். இவர்கள் அழக்கூடாது என போலியான முகத்தை இந்த உலகிற்கு காட்டிக் கொண்டிருக்கின்றனர் என்று உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.