ன், ஷ், யா இந்த எழுத்தில் உங்கள் பெயர் முடிகிறதா..?! இப்படிதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்..!!

Photo of author

By Janani

ன், ஷ், யா இந்த எழுத்தில் உங்கள் பெயர் முடிகிறதா..?! இப்படிதான் உங்கள் வாழ்க்கை இருக்கும்..!!

Janani

இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பெயர்கள் இருக்கும். அந்தப் பெயருக்கான காரணங்களும் இருக்கும். அதே சமயம் கடவுளின் பெயர் எனவும் சிலர் வைத்திருப்பார்கள், ஆசைக்காகவும் ஒரு பெயரை வைத்திருப்பார்கள், நியூமராலஜியின் படியும் பெயர் வைத்திருப்பார்கள். ஆனால் இவ்வாறு வைக்கக்கூடிய பெயருக்கான அர்த்தங்கள் என்ன என்பதை பலரும் அறியாமல் இருப்பர். அதனைக் குறித்து தான் தற்போது காணப் போகிறோம்.

சமீப காலமாக ‘ஷ்’ என்று முடியக்கூடிய பெயரினை தான் அனைவரும் விரும்பி தனது குழந்தைகளுக்கு வைக்கின்றனர். அதாவது ஹரிஷ், சுரேஷ், ரமேஷ், ராஜேஷ் இதுபோன்ற பெயர்களை வைக்கின்றனர். இந்த ஷ் என்று முடியக்கூடிய பெயர்களுக்கு சில கஷ்டங்களும், பல போராட்டங்களும், கல்வி தடைகளும் ஏற்படும் என்பது உண்மை. யா என்று முடியக்கூடிய பெயரினை கொண்டவர்களுக்கு சில தடைகள், தடங்கல்கள், தாமதங்கள் ஆகியவற்றிற்கு பிறகு தான் அவர்களது வாழ்க்கை நன்றாக அமையும்.

அதாவது நிச்சயம் நின்று திரும்ப நடப்பது, திருமணம் நின்று திரும்ப நடப்பது, முதல் திருமணம் விவாகரத்து ஆகி இரண்டாவது திருமணம் செய்வது இவ்வாறு பல தடைகள் ஏற்பட்டு அதற்குப் பிறகு வருகின்ற வாழ்க்கை தான் யா என்று முடியக்கூடிய பெயரினைக் கொண்டவர்களுக்கு சிறப்பாக அமையும்.

இரட்டைப் பெயர்களைக் கொண்டவர்களுக்கு, அதாவது உதாரணமாக சகுந்தலா தேவி என்பதை இரண்டு விதமாக கூப்பிடலாம். இதில் தேவி என நாம் கூப்பிட்டால் தேவி என்ற பெயருக்கான சக்தி தான் அதிகமாக இருக்கும். சகுந்தலா என கூப்பிட்டால் அந்தப் பெயருக்கான சக்தி தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
ஷ் என்று முடியக்கூடிய பெயரினை கொண்டவர்களுக்கு முதல் பாதி வாழ்க்கையானது, அதாவது 33 வயது வரையிலும் அவரது வாழ்க்கை மிகவும் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும். இதுதான் இந்த பெயருக்கான இயற்கை நியதியும் கூட. 33 வயதிற்கு பிறகு தான் ஒரு மாற்றம் ஏற்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

அதேபோன்று ஒரு பெயரின் இறுதியில் ரன், மன், ன் என முடியக்கூடாது என நேமாலஜி கூறுகிறது. ஒருவருக்கு ஒரு பெயரினை வைக்கும் பொழுது அந்த பெயருக்கான நியூமராலஜி எண் மற்றும் அந்த எண்ணிற்கான கிரகம், அந்த எண் அமரக்கூடிய நட்சத்திரம், அந்த நட்சத்திரத்திற்கு உரிய கிரகம் என இவை அனைத்தும் நமக்கு நன்றாக இருந்தால் மட்டுமே நமது பெயரினால் நாம் முன்னேற்றம் அடைய முடியும். அந்த கிரகம் நமக்கு நல்லதாக இல்லாவிட்டால் நமது பெயர் நமக்கு நன்மையை தராது.