7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

Photo of author

By Janani

7 8 6 இந்த மூன்று எண்களில் ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக் கொள்..!! உன்னை பற்றி கூறுகிறேன்..!!

Janani

7 8 6 இந்த எண்கள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்கள் என்றும், நாம் நினைப்பதை மற்றும் கேட்பதை கொடுக்கக்கூடிய எண்கள் என்றும் கூறுகின்றனர். இஸ்லாமிய மக்கள் பயன்படுத்தக்கூடிய மிகவும் புனிதமான எண்கள் என்றும் கூறுகின்றனர். நேர்மறை ஆற்றல்களை தரக்கூடிய எந்த ஒரு எண்களாக இருந்தாலும் அனைத்து மத மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு விஷயத்திற்கும், தொடர்ந்து அந்த விஷயத்தின் மீது ஒரு ஆற்றலையோ ஒரு செயலையோ செய்து கொண்டிருந்தோம் என்றால், அந்த பொருளுக்கு அல்லது செயலுக்கு நாம் சொல்லக்கூடிய சக்தி கிடைப்பதாக அர்த்தம். இது அறிவியல், இயற்கை மற்றும் ஆன்மீகம் ரீதியாகவும் உண்மை என்று கூறப்படுகிறது.

நமது கோவில்களில் உள்ள சிலைகளுக்கு தினமும் அர்ச்சனை, அபிஷேகம், ஆராதனை என செய்யும் பொழுது அந்த சிலைக்கான சக்தி மற்றும் நேர்மறை ஆற்றல்கள் கிடைப்பதாக அர்த்தம். அனைத்து மக்களிடமும் நேர்மறை ஆற்றல்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் என இரண்டும் இருக்கும். ஆனால் அவற்றுள் எந்த ஆற்றல் நம்மிடம் அதிகமாக இருக்கிறதோ, அவற்றின் படி தான் நமது வாழ்க்கை முன்னேற்றம் அமையும் என்பதும் கூறப்படுகிறது.

நாம் கோவிலுக்கு சென்று வரும் பொழுது அங்குள்ள நேர்மறை ஆற்றல்கள் நம்முள் பரவுவதாக கூறப்படுகிறது. எனவேதான் அனைத்து விதமான மத மக்களும் அவர்களது கோவிலுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர். அதேபோன்றுதான் இந்த எண்களுக்கும் அதிகப்படியான நேர்மறை சக்திகள் கொடுக்கப்பட்டு உள்ளது. அவற்றை நாம் பயன்படுத்தும் பொழுது நமக்கும் நேர்மறை சக்திகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

நமது நவகிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களுக்கும் ஒன்பது விதமான எண்கள் இருக்கும். அவற்றை வைத்து பார்க்கும் பொழுது இந்த 786 என்பது கேது பகவான் 7, சனிபகவான் 8, சுக்கிரன் 6 என்ற கிரகங்களை குறிக்கிறது. வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள் இந்த எண்களை வெள்ளி அல்லது செப்பு தகட்டில் எழுதிக் கொள்ளலாம். இல்லையென்றால் ஒரு நெய் தீபம் ஏற்றி வசம்பினை வைத்து, ஒரு பேப்பரில் இந்த எண்களை எழுதிக் கொள்ளலாம்.

பிரம்ம முகூர்த்தத்தில் இந்த எண்களை எழுதிக் கொண்டு, இந்த மூன்று எண்களுக்கான கிரகங்களின் பெயர் அல்லது மந்திரங்களை கூறிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது அந்த மூன்று கிரகங்களின் சக்திகளும் அந்த எண்களுக்கு கிடைப்பதாக அர்த்தம். இதற்கு அதிகப்படியான சக்தியை ஊட்ட வேண்டும் என்று நினைத்தால் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இவ்வாறு செய்து கொள்ளலாம்.

அதற்குப் பிறகு அந்த பேப்பரையோ அல்லது தகட்டினையோ நாம் தொழில் செய்யும் இடம், வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடம், நமது பர்ஸ் போன்ற எந்த இடங்களில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு வைத்துக் கொண்டால் அந்த எண்களுக்கான சக்தி நமக்கு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.