அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

Photo of author

By Janani

அமாவாசை நாட்களில் கட்டாயம் வாங்கவே கூடாத 6 பொருட்கள்..?!

Janani

சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு தான் அமாவாசை. இந்த நாளில் சூரியனின் கதிர்கள் பூமியில் படாமல், சந்திரனின் பிற்பகுதியில் முழுமையாக பதியும். இந்த நிகழ்வு அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக தோன்றிவிடும். சந்திரனின் இந்த இரு கட்டங்களும் மிகவும் முக்கியமானதாக கூறப்படுகிறது. அதிலும் அமாவாசை நாளானது பித்ருகளை வழிபடுவதற்கு ஏற்ற நாளாகவே நமது முன்னோர்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

மேலும் இந்த நாட்களில் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக மகாலய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் வரக்கூடிய அமாவாசை நாட்கள் இன்னும் சிறப்பு வாய்ந்த நாட்களாக கூறப்படுகிறது. ஆனால் இந்த அமாவாசை நாட்களில் ஒரு சில பொருட்கள் வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

இல்லையென்றால் அது வீட்டில் ஒரு பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது.அந்த வகையில் அமாவாசை நாட்களில் எந்தெந்த பொருட்களை வாங்க கூடாது என்பது குறித்து தற்போது காண்போம்.

1. துடைப்பம்: அமாவாசை நாளானது பித்ருக்களுக்காகவே என ஒதுக்கப்பட்ட நாள். இந்த நாட்களில் துடைப்பம், ஒட்டடைக்குச்சி இதுபோன்ற பொருட்களை கட்டாயம் வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சாஸ்திரத்தின் படி துடைப்பம் என்பது மகாலட்சுமியுடன் தொடர்பு கொண்டது. எனவே அமாவாசை நாட்களில் துடைப்பம் வாங்குவது லட்சுமி தேவியை கோபமடைய செய்து வருமானத்தை குறைத்து விடும். மேலும் ஆரோக்கிய பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும்.

2. ஆல்கஹால்: அமாவாசை நாட்களில் ஆல்கஹால் வாங்குவதையும், குடிப்பதையும் தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் அமாவாசை நாளானது சனி பகவானுடன் தொடர்பு கொண்டது. எனவே இந்த நாளில் மதுவை அருந்தினால் அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து, பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

3. இறைச்சி: ஆல்கஹாலை போன்றே அமாவாசை நாட்களில் இறைச்சி வாங்குவதையும், உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். அமாவாசை நாட்களில் இறைச்சியை உட்கொள்வது ஜாதகத்தில் கிரக நிலைகளை மாற்றி, எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கி விடும்.

4. கோதுமை: அமாவாசை நாட்களில் கோதுமையோ அல்லது கோதுமை மாவினையோ வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வருகின்ற அமாவாசை நாளில், கோதுமை வாங்குவதை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

5. தலையில் எண்ணெய் வைப்பது: அமாவாசை நாளில் தலைக்கு எண்ணெய் வைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதற்கு பதிலாக எண்ணையை மற்றவர்களுக்கு தானம் செய்வது நல்லதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தானம் செய்தால் சனி தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. பூஜை பொருட்கள்: அமாவாசை நாளானது பித்ருக்களை வழிபடக்கூடிய நாளாகும். இத்தகைய நாட்களில் பூஜைக்கு தேவையான ஊதுபத்தி, சாம்பிராணி, கற்பூரம், பூக்கள், சாமிக்கு சாட்டக்கூடிய துணிகள் இதுபோன்ற பொருட்களை வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்களை அமாவாசை நாட்களில் வாங்காமல் அதற்கு முந்தைய நாளிலேயே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

மேலும் இந்த அமாவாசை நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்வது பலவிதமான புண்ணியத்தை நமக்கு தேடித் தரும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு செய்வது நமது வீடுகளில் நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கவும் செய்யும்.