திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

Photo of author

By Janani

திருமண தடையா..?? மறுமணம் கைகூட வேண்டுமா..??

Janani

திருமணம் ஆன பின்பு இன்றைய தலைமுறையினருக்கு சரியான புரிதல்கள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவி இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு திருமணம் ஆகி சில நாட்களில் அல்லது சில வருடங்களிலேயே பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடப்பதற்கும், திருமணம் ஆகாமல் திருமணத்தில் பல தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கும் எந்த வழிபாடு செய்தால் அவர்களின் வாழ்க்கை மாறும் என்பது குறித்து காண்போம்.

இந்த உலகில் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு திருமணம் ஆகாமல் இருப்பவர்களும், திருமணம் ஆகி பிரிந்தவர்களும் தான் அதிகம் இருக்கின்றனர். அவர்கள் திருமணம் ஆகவேண்டும் என்பதற்காக செல்லாத கோவில்கள் இல்லை, செய்யாத பரிகாரங்கள் இல்லை.

திருமணத் தடைகள் நீங்குவதற்கும், மறுமணம் கை கூடுவதற்கும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வதற்கும், குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்களுக்கும் செல்லக்கூடிய கோவில் மிகவும் அற்புதமான கோவில் என்றால், “அருள்மிகு திருவழிச் சுழி நாதர் திருக்கோவில்”. இந்த கோவில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழிச்சுழியில் உள்ளது.

இந்த வெள்ளை பிள்ளையார் கோவிலுக்கு நாம் சென்று பசு நெய் வாங்கிக் கொடுப்பது மிகவும் விசேஷம். இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம் அல்லது கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், அவர்களது குடும்பத்தில் உள்ள யாரேனும் அந்த கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் உடுத்தும் உடையை அவர்களுடன் கொடுத்துவிடலாம்.

இவ்வாறு நமது உடையை கொடுத்து விடுவதன் மூலம் நாமும் அந்த கோவிலுக்கு சென்று வந்ததற்கு சமம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கே உள்ள பசுக்களுக்கு உணவினை வாங்கி கொடுப்பதும் சிறப்பை தேடித்தரும்.

கடல் நுரையினால் உருவான பிள்ளையார் என்று அர்த்தம் கொள்வதால் தான், இந்த பிள்ளையாரை வெள்ளை பிள்ளையார் என்று மக்கள் கூறுகின்றனர். இந்த வெள்ளை விநாயகரின் சக்தி மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகள் இருந்தாலும் இந்த கோவிலுக்கு சென்று நெய் வாங்கி தருவது சிறப்பு.

இல்லையென்றால் புதியதாக உள்ள ஒரு அகல் விளக்கில் மூன்று திரிகளை ஒன்றாக திரித்து, அந்த விளக்கில் போட்டு நெய் தீபம் ஏற்றி வந்தாலும் நாம் வேண்டியது நிறைவேறும். திருமண தடைகளை நீக்குவதற்கு பல்வேறு கோவில்களுக்கு ஏறி செல்வதை காட்டிலும், பல்வேறு பரிகாரங்களை செய்வதை காட்டிலும், இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தாலே நடக்கக்கூடிய மாற்றங்களை கண்கூடாக காண முடியும்.

இந்த வெள்ளை பிள்ளையார் கோவிலில் அபிஷேகம் கிடையாது. ஆனால் இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது பச்சை கற்பூரம் வாங்கிக் கொண்டு சென்றால், அந்த பச்சை கற்பூரத்தை பிள்ளையார் மீது தூவி விடுவார்கள். இதுதான் அந்த கோவிலின் விசேஷம்.

விநாயகரின் திருமண தளம் என்று, புராணங்களில் கூறப்பட்டுள்ள கோவிலும் இந்த கோவில் தான். இந்த கோவிலுக்கு சென்று பிள்ளையாரை வணங்கும் பொழுது, எந்தவித தோஷங்களாக இருந்தாலும் நிவர்த்தி அடையும் என்று கூறப்படுகிறது.

எனவே இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது, நெய் மற்றும் பச்சை கற்பூரத்தை வாங்கி கொடுக்கலாம். மேலும் இந்த கோவிலில் உள்ள பசுக்களுக்கும் உணவும் வாங்கி கொடுக்கலாம். இவ்வாறு செய்தாலே நமது தோஷங்கள் நீங்கி, தடைகளும் நீங்கி அனைத்து காரியங்களும் கைகூடும்.