குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

Photo of author

By Janani

குளிகை நேரம் என்றால் என்ன..??குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்..?? என்ன செய்யக் கூடாது..??

Janani

பொதுவாக ஒரு நாள் ஒரு காரியத்தை நாம் செய்ய வேண்டும் என்றால், உடனே நாம் நமது வீட்டில் உள்ள காலண்டரில் ராகு காலம் மற்றும் எமகண்டத்தை பார்ப்போம். ஏனென்றால் இந்த நேரங்களில் அந்த காரியத்தை செய்யக்கூடாது என்பதற்காக. ஆனால் சில வேலைகளை செய்யும் பொழுது, குளிகை நேரத்தையும் பார்க்க வேண்டும் என்று நமது பெரியோர்கள் கூறுவார்கள்.

குளிகை நேரத்தில் நாம் எதை செய்தாலும், அதை திரும்ப செய்ய வைக்கும் என்பதுதான் அந்த நேரத்தின் தன்மை. இந்த குளிகை நேரத்தில் நாம் ஒரு காரியத்தை செய்யும் பொழுது, அந்த காரியம் நமது வாழ்க்கையில் திரும்ப திரும்ப நடந்து கொண்டே இருக்கும். எனவேதான் சில காரியங்களுக்கு குளிகை நேரத்தையும் பார்க்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

குளிகை நேரத்தில் செய்ய வேண்டியவை:

சுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் குளிகை நேரத்தில் செய்து கொள்ளலாம். ஆனால் திருமணத்தை தவிர. ஏனென்றால் ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது, ஒரு முறை தான் நடக்க வேண்டும் என்பது நமது நியதி. எனவே குளிகை நேரத்தில் திருமணத்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.

மற்ற சுபகாரியங்களை செய்து கொள்ளலாம். நாம் வாங்கிய கடனை திரும்பக் கொடுக்கலாம். குளிகை நேரத்தில் நாம் வாங்கிய கடனை அடைத்தோம் என்றால் நமது கடமை விரைவாக அடைத்து முடித்து விடலாம். பிறந்தநாள், திருமணநாள் இது போன்றவைகளையும் குறுகிய நேரத்தில் கொண்டாடிக் கொள்ளலாம்.

நமது வாழ்க்கையில் திரும்ப திரும்ப எந்த காரியம் நடக்க வேண்டுமோ, அதனை குளிகை நேரத்தில் செய்து கொள்ளலாம்.

குளிகை நேரத்தில் செய்யக் கூடாதவை:

தகன செயல்களை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது. அதாவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் அவரை அடக்கம் செய்யும் நேரம் வரையிலும் இந்த குளிகை நேரம் வரக்கூடாது.

இது போன்ற காரியங்களுக்கு குளிகை நேரம் வருகிறதா என்பதை கவனமாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று கடன் வாங்க கூடாது. நகைகளை அடகு வைக்க கூடாது.
குளிகை நேரத்தில் இந்த செயல்களை செய்தோம் என்றால், திரும்பத் திரும்ப இந்த செயல்கள் நமது வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும். எனவே இது போன்ற செயல்களை குளிகை நேரத்தில் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் தங்கி இருக்கக்கூடிய வீட்டை மாற்றி விட்டு, வேறொரு வீட்டிற்கு செல்வதையும் இந்த குளிகை நேரத்தில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். எனவே குளிகை நேரம் என்பது கெடுதலான நேரம் கிடையாது. இந்த நேரத்திற்கான தன்மையை நாம் புரிந்து கொண்டு, இந்த குளிகை நேரத்தில் எந்த செயலை செய்ய வேண்டும், எந்த செயலை செய்யக்கூடாது என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.