ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் சில வயதை கடந்து வருகின்றபோது, அந்த வயதிற்கான பக்குவம், அந்த வயதிற்கான தன்மை என்பது தொடரனும் அப்படின்னு ஒரு நிலை இருக்கு. ஆனா அதை நாம அவருக்கு உணர்த்தி, அவரைச் சார்ந்திருக்கிறவர்களுக்கும் உணர்த்துவதற்கான ஒரு விழாவை நம்முடைய முன்னோர்கள் நமக்கு நிறைய தந்திருக்கிறார்கள்.
59 வயது பூர்த்தி ஆகி 60 வயது துவங்குகின்ற போது செய்யக்கூடிய அந்த பூஜைக்கு உக்கிர ரத சாந்தி பூஜை என்று பெயர். பிறந்த தமிழ் ஆண்டை மீண்டும் சந்திப்பது 60 வயதுல தான் என, தமிழ் வருடங்கள் 60 ஒரு மனிதனுடைய கலி உலக வயதாக சொல்லப்பட்டது.
இந்த 60 என்கின்ற தான் பிறந்த அந்த ஆண்டை ஒரு மனிதன் சந்திக்கின்ற போது கண்டிப்பான முறையில் அதற்கு ஒரு சாந்தி பூஜையை செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எத்தனையோ தடைகள், எத்தனையோ கண்டங்களை தாண்டி அவர் இந்த வருடத்தை மீண்டும் தொட்டு இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் 60க்கு அப்புறம் மறுபடி அவருடைய தமிழ் வருட கணக்கு ஒன்று, இரண்டு, மூன்று என ஆகும்.
ஒருவர் 60 வயதை கடந்த பின்னர் அவருக்கு 64 வயது 65 வயது என்று நாம் கூறினாலும் கூட, அவர்கள் மீண்டும் குழந்தை பருவத்தை தான் அடைவார்கள். அதாவது 60 வயதிற்கு பின்னர் அவர்களின் வயது ஒன்று, இரண்டு, மூன்று என தான் இருக்கும்.
இந்த பூஜை செய்வதற்கு சிறந்த இடம் என்றால் திருக்கடையூர். அங்கு சென்று எம் பெருமானை வணங்கி, ஒரு சிறிய அர்ச்சனை செய்து வணங்கி விட்டு, அங்கு உள்ள ஏழை எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு அன்னதானம் கொடுக்கலாம்.
60 வயது முடிந்து 61 வது வயதில் செய்யக்கூடியது தான் மணி விழா என்று சொல்லக்கூடிய சஷ்டியப்ப பூர்த்தி சாந்தி கல்யாணம். இந்த கல்யாணத்தின் பொழுது விநாயகர் பூஜை, நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், ஆயுஷ் ஹோமம் ஆகிய அனைத்தையும் செய்து, மீண்டும் நம்முடைய ஆயுள் பலம் அதிகரிக்கணும், மனைவி உடன் இருக்க நாம பண்ணிக்கிட்ட கல்யாணத்த நம்ம பிள்ளைங்க முன்னிலையில் கலசங்கள் வைத்து, அபிஷேகம் செய்து அவர்களை தெய்வ நிலைக்கு மாற்றி எல்லாருக்கும் ஆசீர்வாதம் பண்ணுங்க அப்படின்னு பையன், மருமகன், மருமகள், பேரக்குழந்தைங்க அத்தனை பேரும் சேர்ந்து செய்து வைக்கக் கூடியதுதான் இந்த 60 ஆவது திருமணம்.
நம்ம கல்யாணத்தை நாம ரசிச்சு பார்த்ததுங்கறத விட, நம்ம பிள்ளைங்க செஞ்சு வைக்க நாம ரசிக்கிறது அப்படிங்கிறது ஒரு பெரிய கொடுப்பினை தானே இதை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? என்றால் பல மரபுகளில் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற நியதி உள்ளது. அவ்வாறு இல்லை என்றால் அவரவர் விருப்பம் தான்.
மனிதனுடைய வாழ்க்கையில் 60 வயது என்பது ஒரு முழுமையாக பூர்த்தி அடைந்த நிலை. அந்தப் பூர்த்தியை அவர் நிறைவு செய்து புதிய ஆரம்பத்தை உண்டாக்குகின்றார். இதனால்தான் இந்த 60வது கல்யாணம். இந்த திருமணத்தை திருக்கடையூரில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.அவரவர்களுக்கு விருப்பமான ஆலயங்களிலும் செய்யலாம், குலதெய்வ கோவில்களிலேயும் செய்யலாம், நமது வீடுகளிலும் செய்து கொள்ளலாம்.