சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

Photo of author

By Janani

சனிக்கிழமை அன்று வாங்கக்கூடாத பொருட்கள்..!! செய்யக் கூடாத விஷயங்கள்..!!

Janani

சனிக்கிழமை என்பது சனி பகவானுக்கு உரிய நாள் என்பது, நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சனி பகவானின் சில மோசமான தாக்குதல்களை தவிர்க்க, மக்கள் பல பரிகாரங்களையும் செய்து வருவார்கள். சிலர் சனி பகவானின் ஆசியைப் பெற விரதத்தையும் கடைப்பிடிப்பார்கள். சில பொருட்களை இந்த கிழமையில் தானமும் செய்வார்கள்.

அதேபோன்று சனி பகவானின் கோபத்தை தவிர்க்க சனிக்கிழமை அன்று சில விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சனிக்கிழமை அன்று செய்யக்கூடாத செயல்கள் மற்றும் வாங்க கூடாத பொருட்கள் எவை என்பது குறித்து காண்போம்.

சனிபகவானின் கோபத்திற்கு ஆளானவர்கள் சில அசுபங்கள் மற்றும் சில பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். முக்கியமாக இது ஒருவருடைய கர்மாவை பொருத்து, அவர்களை தண்டித்து ஒழுக்கத்துடன் வாழ்க்கையை நடத்த அனுமதிக்கும்.அதே சமயம் சனி பகவானின் ஆசியைப் பெற்றவர்கள் அபரிவிதமான வெற்றிகளையும், பொருள்சார் வளர்ச்சிகளையும் பெறுவார்கள்.

சனிக்கிழமை அன்று மது அருந்துவதை கட்டாயம் தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சனைகளையும், பல சிக்கல்களையும் உண்டாக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்கள், மது அருந்துவது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி சனிக்கிழமை அன்று நகம் வெட்டுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. அதேபோன்று முடியையும் வெட்டக்கூடாது. இவ்வாறு செய்தால் சனி பகவானின் கோபத்தை அதிகரித்து வாழ்க்கையில் துரதிஷ்டத்தை ஏற்படுத்தும்.

சனிக்கிழமை அன்று எண்ணெய் மற்றும் செருப்பு போன்ற தோல் பொருட்களை வாங்குவதை கட்டாயம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்களை சனிக்கிழமை அன்று வாங்கினால் கடன் அதிகரிக்கும். வாழ்க்கையில் நிம்மதியும் குறையும்.

பால், தயிர் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை அன்று உட்கொள்ளக் கூடாது. ஒருவேளை உட்கொண்டால் அதில் சிறிதளவு மஞ்சள் அல்லது வெள்ளம் சேர்த்து உண்ண வேண்டும். அதேபோன்று ஊறுகாய், கத்தரிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் போன்றவற்றையும் உண்ணக் கூடாது.

சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை வாங்குவது அசுப குணங்களாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சனிக்கிழமை அன்று இரும்பு பொருட்களை தானம் செய்வதால் சனி பகவானின் அருள் கிடைக்கும்.

சனிக்கிழமை அன்று கரி கட்டையை வேறு இடத்தில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது. இவ்வாறு கொண்டு வந்தால் அது குடும்பத்தில் பல பதற்றங்களை உண்டாக்கும்.

சனிக்கிழமை அன்று துடைப்பம் வாங்கக்கூடாது. சனிக்கிழமை அன்று துடைப்பம் வாங்கினால் வீட்டில் உள்ள செல்வத்தை அழிக்க நேரிடும்.

அதேபோன்று சனிக்கிழமை அன்று உப்பு வாங்குவதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அது குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் ஆரோக்கியத்தை குறைத்து விடும்.