ஒரு வீடு என்பது தெய்வ கடாட்சமாக திகழ வேண்டும் என்றால், அந்த வீட்டின் சமையல் அறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். சமையலறையில் பலவிதமான பொருட்களை வைத்திருப்போம். அவற்றை நல்லவை தீயவை என பிரிக்க முடியாது. அனைத்து பொருட்களையும் நமது உணவை சமைப்பதற்காகவே வைத்திருப்போம்.
அன்ன லட்சுமியின் ஆசீர்வாதம் பெற்ற பொருட்கள் என சில பொருட்கள் உள்ளன. அவற்றை நமது சமையலறை மேடையில் வைக்கும் போது நமது வீட்டில் பணக்கஷ்டம் ஏற்படாது. ஆனால் சில பொருட்களை வைக்கக் கூடாது. அவை எந்தெந்த பொருட்கள் என்பது குறித்து தற்போது காண்போம்.
நமது வீட்டின் சமையல் அறை என்பது தென்கிழக்கு திசையில் இருந்தால் சிறப்பு. நாம் சமைக்க கூடிய அடுப்பிற்கு அருகில் ஒரு சிறிய சொம்பு அல்லது பாத்திரத்தில் நீரை நிரப்பி எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று நமது அடுப்பின் வலது பக்கத்தில் கல் உப்பு, நெய், தண்ணீர் இது போன்ற பொருட்களை வைக்க வேண்டும்.
இவ்வாறு வைக்கும் பொழுது நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் மேலும் அதிகரிக்கும். சிலர் கல் உப்பை சமையல் மேடைக்கு கீழே அல்லது வேறு இடங்களில் வைத்திருப்பார்கள். அவ்வாறு வைத்திருந்தாலும் கூட ஒரு சிறிய ஜாடியில் ஆவது கல் உப்பை போட்டு அடுப்பிற்கு வலது பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
முதலாவதாக சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் கருவாடு இது போன்ற பொருட்களை வைக்கக்கூடாது. மேலே உள்ள அலமாரிகளிலும் இந்த கருவாட்டை வைக்கக் கூடாது. சமையல் மேடைக்கு கீழே உள்ள அலமாரிகளில் மட்டுமே கருவாட்டை வைக்க வேண்டும்.
இரண்டாவதாக கருப்பு உளுந்து, கருப்பு எள் இது போன்ற பொருட்களையும் சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. இந்த பொருட்களையும் சமையல் மேடைக்கு கீழே தான் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் நமது வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் குறையாமல் இருக்கும். பணக் கஷ்டமும் ஏற்படாது.
மூன்றாவதாக சமையல் மேடையின் வலது பக்கத்தில் கூர்மையான பொருட்களை வைக்கக் கூடாது. அதாவது கத்தி, கத்திரிக்கோல் இது போன்ற பொருட்களை வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. இதை தவிர்த்து வேறு இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.
நான்காவதாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய நல்லெண்ணெய். இதையும் சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் வைக்காமல் சமையல் மேடையின் கீழ் பகுதியில் வைக்க வேண்டும். ஏனென்றால் எண்ணெய் என்பது சனி பகவானின் ஆதிக்கம் கொண்டது, எனவே அதனை சமையல் மேடையின் வலது பக்கத்தில் வைக்க கூடாது.
ஐந்தாவது நாம் வாங்கி வரக்கூடிய அசைவம் சம்பந்தமான எந்த ஒரு பொருட்களையும் திறந்த நிலையில் சமையல் மேடையின் வலது பக்கத்தில் வைக்கக் கூடாது. ஒரு சில பொருட்களை இந்த இடத்தில் இருந்து எடுத்து புலங்கும் பொழுது அதற்கான சக்தி என்பது நமக்கு கிடைக்கும்.
எனவே சமையல் மேடையில் வலது பக்கம் என்பது அன்ன லட்சுமிக்கு மிகவும் உகந்த ஒரு இடமாகும். எனவே அந்த இடத்தில் லட்சுமி கடாட்சம் உருவாகக்கூடிய பொருட்களை மட்டுமே வைக்க வேண்டும். இவ்வாறு வைத்து நாம் நமது சமையலறையை பயன்படுத்தும் பொழுது வீட்டில் அன்ன குறைவு மற்றும் பண குறைவு ஏற்படாது.