குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

Photo of author

By Janani

குலதெய்வத்தை ஒருமுறை இப்படி வணங்கி பாருங்கள்..!! தீராத பிரச்சனைகளும் தீரும்..!!

Janani

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். அது கடன் பிரச்சனை, வறுமை, திருமண தடை, வேலையின்மை, குழந்தை பாக்கியம் இன்மை, நிம்மதியின்மை இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இந்த உலகில் பிரச்சனை இல்லாத மனிதர்களே கிடையாது.

இதுபோன்ற எந்தவித தீராத பிரச்சனைகளாக இருந்தாலும் ஒரு எளிய வழிபாட்டை செய்வதன் மூலம், தீராத பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம். இந்த வழிபாட்டை நீங்கள் செய்த ஒரு நாளில் அதற்கான பலனை காண முடியும்.

ஒரு குடும்பத்திற்கு முழு முதல் கடவுளாக திகழ்வது அவர்களது குலதெய்வம் மட்டுமே. ஒருவர் பக்தி என்றால் என்ன என்பது குறித்து அறிவதற்கு முன்பாகவே, அதாவது சிறு வயதிலேயே அவர்களது குலதெய்வ கோவிலுக்கு சென்றிருப்பார்கள். அவர்களுக்கு மொட்டை அடித்து காது குத்துவது இது போன்ற விசேஷங்கள் அங்கு நடைபெற்றிருக்கும்.

யார் ஒருவர் அவரது குலதெய்வத்தை சரியான முறையில் தொடர்ந்து வழிபட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு அத்தனை கிரகங்கள் மற்றும் தெய்வங்களின் ஆசியும் கிடைக்கும் என்பது உறுதி. குலதெய்வத்திற்கு பெரிய பூஜையையோ, வழிபாட்டையோ, தான தர்மத்தையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. குலதெய்வத்தை மறவாமல் சரியான முறையில் வழிபட்டாலே போதும் அனைத்து விதமான நன்மைகளும் கிடைத்துவிடும்.

உங்களுடைய குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அந்த குலதெய்வ கோவிலுக்கு அமாவாசை நாட்களில் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு வாழை இலை மற்றும் 9 தேங்காய் கொண்டு செல்ல வேண்டும். நாம் கொண்டு சென்ற அந்த 9 தேங்காயையும் உடைத்து, வாழை இலையில் பச்சை அரிசியை நிரப்பி கொண்டு அந்த உடைத்து தேங்காயை வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து உங்களது பிரச்சனைகளை கூறி, குல தெய்வத்தின் உதவியை கேட்க வேண்டும். அதன் பிறகு உங்களால் முடிந்த யாரேனும் ஒருவருக்காவது அல்லது ஏதேனும் ஒரு வாயில்லா ஜீவனுக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.

உங்களது குலதெய்வம் பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி நாட்களில் சென்று, இதே போன்று ஒன்பது தேங்காயை உடைத்து வாழை இலையில் வைத்து, தீபம் ஏற்றி வழிபாட்டினை செய்ய வேண்டும். அதேபோன்று நீங்கள் எப்பொழுது குலதெய்வ கோவிலுக்கு சென்றாலும், கோவிலுக்கு தேவையான நல்லெண்ணெய், சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அதாவது வெல்லம் ஆகியவற்றை வாங்கி கொடுத்தால் மிகவும் சிறப்பு.

குலதெய்வ கோவிலுக்கு சென்று இதுபோன்று ஒருமுறை உங்களது வேண்டுதல்களை கூறி வழிபட்டு வந்தால் போதும், நீங்கள் வேண்டியது கண்டிப்பாக நடந்து முடியும் என்பது உறுதி. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தும், இந்த வழிபாட்டை இதே முறையில் செய்து கொள்ளலாம்.

ஆனால் அதற்கான பலன் கிடைக்க சற்று தாமதம் ஆகும். எனவே முடிந்த அளவிற்கு உங்களது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது என்பது சிறப்பு. உங்களது குலதெய்வ கோவிலின் மண்ணை நீங்கள் மிதித்தாலே போதும், நவகிரகங்கள் மற்றும் மற்ற தெய்வங்களின் ஆசியும் உங்களுக்கு கிடைத்துவிடும்.

உங்களது குலதெய்வத்தை தவிர்த்து மற்ற எந்த தெய்வத்தை பலமுறை சென்று வணங்கினாலும் அதில் பெரிய பலன்கள் எதுவும் கிடைக்காது. அதாவது முதலில் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கு இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.