கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

Photo of author

By Janani

கோடை காலத்திலும் பூக்களை ஒரு வாரத்திற்கு வாடாமல் வைத்திருக்க வேண்டுமா..?? இதோ அதற்கான டிப்ஸ்..!!

Janani

தினமும் பூக்களை வாங்க இயலாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை பூக்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள். அவ்வாறு வாங்கி கட்டி வைத்திருக்கும் பூக்கள் இரண்டு நாட்கள் ஆனதும், ஒன்று வாடிவிடும் இல்லையென்றால் அழுகத் தொடங்கி விடும். ஆனால் பூக்களை வாட விடாமல் ஒரு வாரம் ஆனாலும் பிரஷ் ஆகவே வைத்துக் கொள்ள முடியும். அதற்கான வழியை தான் தற்போது காணப் போகிறோம்.

1.முதலில் கட்டி வைத்த பூவை அழகாக சுருட்டி அதை ஒரு வாழை இலையில் வைத்து நன்றாக மடித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக வாழை இலையில் பூவை வைத்து மடிக்கும் போது அழுத்தம் கொடுக்காமல் லேசாக பேக் செய்ய வேண்டும். பிறகு ஒரு சில்வர் டப்பாவில் அதை வைத்து காற்று புகாதபடி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இப்படி சேமித்தால் ஒரு வாரம் ஆனாலும் மல்லிகை பூ வாடாமல் மொட்டாக இருக்கும்.

2.ஒருவேளை உங்களுடைய வீட்டில் வாழை இலை இல்லை என்றால், ஒரு வெள்ளை காகிதத்தில் பூவை வைத்து மெதுவாக சுருட்டி பேக் செய்ய வேண்டும். பிறகு ஒரு காட்டன் துணி பையை தண்ணீரில் நனைத்து பிழிந்து அந்த பைக்குள் பூ வைத்த காகிதத்தை லேசாக சுருட்டி வைத்து, பின் சில்வர் டப்பாவில் வைத்து மூடி, பிரிட்ஜில் வைக்க வேண்டும். மல்லிகை பூவை இப்படி சேமித்தால் நீண்ட நாட்கள் பூ வாடாமல் இருக்கும்.

3.உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை என்றால் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் வாழை இலையை போட வேண்டும். பிறகு அதன் மேல் கட்டிய பூவை வைக்கவும். பின் ஈரமான காட்டன் துணியை நனைத்து பிழிந்து அந்த பாத்திரத்தை மூடி, சில்வர் தட்டை அதன் மேல் கவிழ்த்து வைத்தால் பூ ஒரு வாரம் ஆனாலும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும். வாழை இலையை தண்ணீரில் மிதக்க வைக்கும் போது வாழை இலைக்குள் தண்ணீர் வந்து விடக்கூடாது என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் காட்டன் துணியை பயன்படுத்தும் போது அது காய்ந்து விட்டால், மீண்டும் மீண்டும் நனைத்து வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலே சொன்ன குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் நிச்சயம் மல்லிகை பூ மட்டுமல்லாமல் அனைத்து விதமான பூக்களும் வாடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.