1. அரிசி மற்றும் தானிய வகைகளை அதிக நேரம் தண்ணீரில் கழுவ கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள சத்துக்கள் தாதுக்கள் கரைந்து விடும்.
2. பச்சை குடமிளகாய் சில நேரங்களில் காரமாக இருக்கும். அப்படி இருக்கும் மிளகாயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சமைத்தால் காரம் இருக்காது.
3. வெங்காய சட்னியோ அல்லது தக்காளி சட்னியோ செய்யும் பொழுது, அதனுடன் வெள்ளை அல்லது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த சட்னியில் சிறிதளவு சேர்த்தோம் என்றால் சுவையும், மணமும் அதிகமாக இருக்கும்.
4. முள்ளங்கி சமைக்கும் பொழுது எண்ணெயில் நன்றாக வதக்கி சமைத்தால் எளிதில் சளி பிடிக்காது.
5. தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால் அதன் மீது கோலப்பொடி அல்லது அரிசி மாவை தூவி துடைத்தால், எண்ணெய் பிசுக்கு தரையை விட்டு நீங்கி விடும்.
6. மெதுவடைக்கு மாவு அரைக்கும் பொழுது உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சை அரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைத்தால், மெதுவடை மொறு மொறுப்பாக இருக்கும்.
7. பால் பாயாசம் செய்யும் பொழுது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும்.
8. ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து சமையலறையின் ஓரங்களில் தெளித்து விட்டால் ஈ மற்றும் எறும்புகள் வராமல் இருக்கும்.
9. ரவையை நெய் விட்டு வறுத்து, காய்ச்சின பால் சேர்த்து கேசரி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
10. இஞ்சியை துருவி வெயிலில் காயவைத்து பொடித்து வைத்துக் கொண்டால் பால், டீ, குருமா, பொங்கல் இது போன்ற அனைத்திலும் இந்த பவுடரை சேர்த்தால் மணமும், உடல் ஆரோக்கியமும் சிறந்த இருக்கும்.
11. இஞ்சி, பூண்டு விழுது கெட்டுப் போகாமல் இருக்க அரைக்கும் பொழுது சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
12. நெய் காய்ச்சும் பொழுது சிறிதளவு உப்பு சேர்த்து காய்ச்சும் பொழுது நல்ல வாசனையாகவும், நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.
13. தேங்காய் துவையல் செய்யும் பொழுது சிறிதளவு கசகசா சேர்த்து செய்தால் சுவையாகவும், இரவில் நல்ல தூக்கமும் ஏற்படும்.
14. கடலை மாவு, அரிசி மாவு, வறுத்த வேர்க்கடலை பொடி ஆகிய மூன்றையும் சேர்த்து பிசைந்து வெங்காய பக்கோடா செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
15. உருளைக்கிழங்கு வறுவல் செய்யும் பொழுது சிறிதளவு இட்லி பொடி சேர்த்து செய்தால், வறுவலின் சுவை கூடுதலாக இருக்கும்.