அருண் இயக்கத்தில் விக்ரம் நடித்து கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி ரிலீஸான திரைப்படம்தான் வீர தீர சூரன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் மற்றும் ராயன் படத்தில் நடித்த துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். ஓடிடி உரிமை தொடர்பாக தயாரிப்பாளர் சொதப்பியதில் 27ம் தேதி காலை வெளியாகியிருக்க வேண்டிய இப்படம் அன்று மாலை 5 மணிக்குதான் வெளியானது. ஒரு படம் சொன்னபடி வெளியாக வில்லை என்றாலே அதன்பின் டேக் ஆப் ஆவது கஷ்டம். பல படங்கள் இப்படி சொன்ன நேரத்தில் வெளியாகத ஒரே காரணத்தினால் தோல்வி அடைந்திருக்கிறது.
இப்போது வீர தீர சூரனும் இந்த வரிசையில் இணைந்திருக்கிறது. படம் நன்றாக இருக்கிறது.. விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார்.. என படம் பார்த்த ரசிகர்கள் சொன்னாலும் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. குறிப்பாக 27ம் தேதி எம்புரான் படம் வெளியானதால் பல நல்ல தியேட்டர்களை எம்புரான் ஆக்கிரமித்துவிட்டது. இதனால் பல ஊர்களில் வீர தீர சூரன் படம் மொக்கை தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான அடுத்த நாளே படம் வெற்றி என அறிவித்து விக்ரமுக்கு ஆளுர மாலை எல்லாம் போட்டார்கள்.
மேலும், விக்ரம் பேசி வெளியிட்ட வீடியோவில் ‘ ‘ஒரு ராவான, வித்தியாசமான ஆக்சன் படத்தை கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டே வீர தீரன் படத்தில் அவ்வளவு உழைப்பை போட்டோம். படத்தை எப்படியாவது ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என தோன்றியது. சரி சினிமாவுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து படம் வெளியானது.
ஒருபடம் சொன்னபடி வெளியாகவில்லை எனில் அவ்வளவுதான். அதுவும் ரிலீஸ் தேதி அன்று முதல் 2 காட்சிகள் வெளியாகவில்லை. எனவே, என்ன ஆகுமோ என நினைத்தேன். ஆனால், ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து வருகிறார்கள். சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்தோம் என்றெல்லாம் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. ரசிகர்களுக்கு நன்றி. படம் பார்க்காதவர்கள் பார்ப்பார்கள் என நம்புகிறேன்’ என பேசியிருந்தார். ஆனால், வீர தீர சூரன் படம் இதுவரை 35 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
சேட்டிலைட் மற்றும் டிவி உரிமை, தியேட்டர் மூலம் கிடைத்த வசூல் என தயாரிப்பாளர் நஷ்டப்படாமல் தப்பித்துவிட்டார். ஆனால், படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை என வலைப்பேச்சி பிஸ்மி வீடியோ ஒன்றில் சொல்லி இருக்கிறார்.