கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

Photo of author

By Janani

கடவுளுக்கு எலுமிச்சை மாலை சாற்றுவது ஆபத்து..!! எச்சரிக்கிறார் யதார்த்த ஜோதிடர்..!!

Janani

இந்து மத சடங்குகளில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது எலுமிச்சை. எலுமிச்சை பழம் இல்லாமல் எந்தவொரு மங்கள சடங்குகளும் முழுமையடையாது. சமஸ்கிருதத்தில் எலுமிச்சை நிம்பு பலா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு புனிதமான பழம் என்று நம்பப்படுகிறது.

பழங்காலத்திலிருந்தே, எலுமிச்சை ஆயுர்வேத மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் தினசரி சமையல் பயன்பாடுகளில், அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தனித்துவமான சுவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழத்தை அனைத்து சாமிகளுக்கும் சாட்டுவோம். எலுமிச்சம் பழம் இல்லாமல் எந்த ஒரு கடவுளையும் வணங்க மாட்டோம். குறிப்பாக மாலையாக கோர்த்து சாமிக்கு கொடுப்போம். ஆனால் கடவுளுக்கு எலுமிச்சம் பழத்தை காணிக்கையாக கொடுக்கும் பொழுது, மாலையாக கோர்த்து கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

எந்த ஒரு கடவுளுக்கும் எலுமிச்சம்பழத்தை மாலையாக கோர்த்து நாம் கொடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக உதிரி பழங்களாகவே கொடுக்க வேண்டும். நம்மால் எவ்வளவு எலுமிச்சம் கனிகளை வாங்க முடியுமோ, அவ்வளவு கனிகளை வாங்கி அந்த கோவில் பூசாரியிடம், இந்த கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காணிக்கையாக கொடுத்து விடும்படி கூறி கொடுக்க வேண்டும்.

எந்த ஒரு தெய்வத்தின் பாதத்தில் வைத்து கொடுக்கக்கூடிய காணிக்கையாக இருந்தாலும், அது அந்த தெய்வத்தின் ஆசிர்வாதமாக நமக்கு திகழும். எனவே எலுமிச்சம் பழத்தை ஊசியினால் துளைக்காமல் முழு கனிகளாக கொடுக்க வேண்டும். ராஜ கனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சம்பழம் ஊசியினால் துளைக்கும் பொழுது செத்தக் கனியாக மாறிவிடும்.

ஏதேனும் ஒரு கடவுளுக்கு எலுமிச்சம் பழம் மாலையை சாட்டுவதாக வேண்டுதல் வைத்திருந்தால், ஒன்று ஊசியினால் துளைக்காமல் வேறு முறையில் மாலையை கோர்க்க வேண்டும் அல்லது உதிரிப் பழங்களாக கொடுப்பதும் சிறந்தது.

எலுமிச்சம் பழத்தை மாலையாக கோர்த்து கடவுளுக்கு சூட்டினாலும் அதனால் எந்த ஒரு பலனும் கிடைக்காது, அது கஷ்டத்தையே ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். ஊசியினால் துளைத்த கனிகளை நமக்கு காணிக்கையாக கொடுத்தாலும், அதனை வீட்டிற்கு கொண்டு வந்து ஜூஸ் போட்டும் குடிக்க முடியாது.

ஏனென்றால் ஊசியினால் துளைத்ததால் கனியின் உள்ளே பாக்டீரியாக்கள் இருக்கும்.எலுமிச்சம் கனியை மாலையாக கொடுக்காமல் உதிரி கனிகளாக நமது கைகளால் தொட்டு, மனதார வேண்டிக் கொண்டு கொடுத்தால் நாம் வேண்டிய காரியம் நிச்சயம் நிறைவேறும். உங்களால் முடிந்த எண்ணிக்கையில் வாங்கி கொடுத்தால் போதுமானது. உதாரணமாக 108,97,95,25,14,9,16, 32, 23,37,33 இதுபோன்ற எண்ணிக்கையில் எலுமிச்சம் பழத்தை கொடுக்கலாம்.

ஒவ்வொரு எண்ணிக்கைக்கும் ஒவ்வொரு சூட்சமம் இருக்கிறது. எத்தனை எண்ணிக்கையில் பழங்களை கொடுத்தாலும், அதில் இருந்து ஒரு ஐந்து பழங்களை மட்டும் நாம் வாங்கிக் கொண்டால் போதும். மற்ற கனிகளை கோவில்களுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காணிக்கையாக கொடுத்து விட வேண்டும்.

இந்த ராஜ கனியை அனைத்து கடவுளுக்கும் நாம் காணிக்கையாக கொடுக்கலாம். அனைத்து கடவுளுக்கும் மஞ்சள், குங்குமத்தை கொடுப்பது போல இந்த எலுமிச்சம் கனியையும் கொடுக்கலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சம் பழம் என்பது நாம் தொழில் செய்யக்கூடிய இடம் மற்றும் நமது வீடுகளில் கட்டாயம் தினமும் இருக்க வேண்டும்.

இந்த எலுமிச்சம் பழம் திருஷ்டியை போக்க பயன்படுவது மட்டுமின்றி, ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை அந்த இடத்திற்கு கொடுக்கிறது. இந்த எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் தான் போட்டு வைக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. சாதாரணமாக நாம் இருக்கக்கூடிய இடத்தில் இந்த எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொண்டாலே போதும். நேர்மறையான ஆற்றல்கள் அந்த இடத்தில் பரவச் செய்யும்.