தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தமன்னா. இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு அதிகம் நடித்திருக்கிறார். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம், தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்த நடிகை இவர். தெலுங்கிலும் பிரபாஸ் உள்ளிட்ட பலருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்திலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார்.
ரஜினி நடிப்பில் உருவான ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் தமன்னா போட்ட குத்தாட்டம் காஜி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதன்பின் பாலிவுட்டுக்கு போய் வெப் சீரியஸ்களில் நடிக்க துவங்கினார். அதிலும், படுக்கையறை காட்சிகள் கொண்ட வெப்சீரியஸ்களில் தமன்னா காட்டிய தாராள கவர்ச்சி ரசிகர்களை சூடாக்கியது.
மேலும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னாவுக்கு காதல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இதுபற்றி தமன்னா வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. சில வருடங்களில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், ஆன்மிகத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக தமன்னா இருக்கிறார். சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்தும் சிவராத்திரி விழாவில் அடிக்கடி கலந்துகொள்வார். இந்நிலையில்தான் ஒடெல்லா 2 என்கிற படத்தில் பெண் சாமியாராக தமன்னா நடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியானது. அதில் ‘நாம் நிற்பதற்கு தேவை பூமி மாதா. நாம் வாழ்வதற்கு தேவை கோமாதா.. இதில் நீங்கள் வாழ கோமாதாவை கொல்ல வேண்டாம். அதன் சிறுநீரை விற்று கூட நீங்கள் வாழலாம்’ என தமன்னா வசனம் பேசியிருக்கிறார்.
இதுதான் இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. தமன்னா முழு சங்கியாக மாறிவிட்டார் என பலரும் அவரை ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். விஜய் வர்மா கூட சேர்ந்தா இப்படித்தான் ஆகும் என்றும் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.