பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

Photo of author

By Janani

பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!

Janani

திருமணம் ஆகின்ற பொழுது ஒரு பெண்ணிற்கு அணிகலனாக தரக்கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்றால் திருமாங்கல்யம், மெட்டி மற்றும் குங்குமம். முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமானதாக கருதி உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் திருமணம் ஆன பெண்களிடம் இந்த மூன்று பொருட்களையும் காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது.

ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்த பெண்ணின் கால் விரலில் தடை என்பதை போடுவார்கள். அதாவது இரும்பு வளையம் ஒன்றை போடுவார்கள். அவ்வாறு போட்டுக் கொண்டால் காத்து கருப்பு அண்டாது என்று பலரும் கூறுவர். ஆனால் அது உண்மை கிடையாது.

ஒரு பெண் வயதிற்கு வரும் பொழுது அந்தப் பெண்ணின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய மாற்றமானது, அந்தப் பெண்ணின் உடலில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக தான் சிறிது நாட்கள் அந்த இரும்பு வளையத்தை போட்டு விடுவார்கள்.

அதேபோன்று திருமணம் ஆன பெண்ணிற்கும் மெட்டி என்பது கால் விரலில் அணிவிக்கப்படும். மெட்டி என்பது ஒருப் பெண் திருமணம் ஆனவள் என்பதை அடையாளம் காட்டக்கூடிய ஒரு பொருள் கிடையாது. ஒரு பெண்ணின் உடலானது திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்கு பின்பும் பலவிதமான மாறுதல்களை காணும். குறிப்பாக பெண்ணின் கர்ப்பப்பை.

உச்சம் தலையில் இருந்து கால்கள் வரை இருக்கக்கூடிய அனைத்து நரம்புகளும் பாதத்தை தான் சென்றடையும். நமது உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளின் நரம்புகளும் நமது கால்களில் தான் இருக்கிறது. பெண்ணின் கர்ப்பப்பை நரம்பும் கால் விரலுடன் தொடர்புடையது. அதாவது பெண்கள் மெட்டி அணியக்கூடிய அந்த விரலில் தான் கர்ப்பப்பையின் நரம்பு இருக்கிறது.

எனவே அந்த விரலில் வெள்ளியினால் செய்யப்பட்ட மெட்டியை அணியும் பொழுது, அந்த வெள்ளியில் இருக்கக்கூடிய ஈர்ப்பு சக்தி கர்ப்பப்பையை வலுவானதாக மாற்ற உதவுகிறது. இதனால்தான் நமது முன்னோர்கள் இதுபோன்ற பழக்கவழக்கங்களை நம்முடைய சாஸ்திரம், சம்பிரதாயம் என்று கூறி நம்மை இதுபோன்ற செயல்களை செய்ய வைத்து வருகின்றனர்.

பெண்கள் கால் விரலில் மெட்டி அணிவதால் உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் ஏற்படுவது போன்றே ஆன்மீகம் ரீதியாகவும் பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த மெட்டியை ஆன்மீகம் ரீதியாக எந்த விரலில் அணிய வேண்டும்? எந்த நாட்களில் மெட்டியை மாற்றக் கூடாது? இதுபோன்ற தகவல்களை தற்போது காண்போம்.

பெண்கள் மெட்டியை கட்டை விரலுக்கு அருகில் இருக்கும் விரலில் மட்டும் தான் அணிய வேண்டும். உடைந்து போன மற்றும் சேதம் அடைந்த மெட்டிகளை அணியக்கூடாது. இதுபோன்ற மெட்டிகளை பெண்கள் அணிந்து கொண்டிருந்தால், அது வீட்டில் பண கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும்.

இது போன்ற மெட்டிகளை மாற்றிவிட்டு புதிய மெட்டியை வாங்கும் பொழுது வெள்ளிக் கிழமை, செவ்வாய்க் கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் உங்களது திருமண நாளின் பொழுது மாற்றக்கூடாது. மெட்டியை நீண்ட நாட்களாக அணிந்து கொண்டிருக்காமல், ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றிக் கொள்வது நல்லது.

அதேபோன்று ஒரே காலில் இரண்டு அல்லது மூன்று மெட்டிகளை அணியக்கூடாது. அவ்வாறு அணிந்தால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், வருமானம்) பாதிப்பு அடையும். உங்களுடைய பணம் ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு உங்கள் கைக்கு வர தாமதம் ஆகின்றது என்றால், அம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மெட்டியை வாங்கி கொடுத்தால் வரவேண்டிய பணம் விரைவில் வந்துவிடும்.