உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

Photo of author

By Janani

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருக்கிறதா? அல்லது துஷ்ட சக்திகள் இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகள்..!!

Janani

இந்த உலகில் உள்ள அனைத்து குடும்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதாவது ஒரு சில குடும்பத்தினர் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பவர்களாகவும், அதேசமயம் ஒரு சில குடும்பத்தினர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். பல துன்பங்களை அனுபவிக்கும் குடும்பத்தினர் மற்ற குடும்பங்களை பார்த்து, நம்மால் ஏன் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியவில்லை? என்று ஏங்குவதும் உண்டு.

இதற்கு காரணம் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சக்திகள் இருக்கும் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதாவது ஒரு சில வீடுகளில் எதிர்மறை ஆற்றல்கள் அதாவது தீய சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இது போன்ற குடும்பங்களில் தான் துன்பங்கள், துயரங்கள், கஷ்டங்கள் போன்றவை ஏற்படும். அதே போன்று ஒரு சில வீடுகளில் தெய்வ சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்வார்கள். பெரிய அளவிலான கஷ்டங்கள் எதுவும் இந்த குடும்பத்திற்கு வராது.

இப்பொழுது உங்கள் வீட்டில் எந்த சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கான சில வழிமுறைகளை இந்த பதிவில் காண்போம்.

உங்கள் வீட்டில் தீய சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகள்:

1. தீய சக்திகள் இருக்கின்ற வீட்டில் நீங்கள் தூங்கும் பொழுது கெட்ட கனவுகள் அதிகம் வரும்.

2. வீட்டில் ஒரு விதமான கெட்ட நாற்றம் அடிக்கும். வீட்டை எவ்வளவு தான் துடைத்தாலும் அந்த நாற்றம் போகாது.

3. மூன்றாவதாக உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வரும். நிம்மதி இல்லாமல் இருப்பீர்கள். எவ்வளவுதான் முயன்றாலும் சண்டையை தடுக்க முடியாது.

4. நீங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் உங்களது குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாது. ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருப்பதற்கான அறிகுறிகள்:

1. பூஜை அறையில் பல்லிகள் இருந்தால் மிகவும் சிறப்பு. உங்கள் வீட்டின் பூஜை அறையில் பல்லிகள் இருந்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்திகள் இருப்பதை குறிக்கிறது.

2. காலை நேரத்தில் காகத்திற்கு சாதம் வைத்து பாருங்கள். காகம் நீங்கள் வைத்த உணவை சாப்பிடுகிறது என்றால் உங்கள் குடும்பத்திற்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் இருக்கிறது என்று அர்த்தம். ஒருவேளை சாப்பிடவில்லை என்றால், தினமும் உணவை வைத்து காகத்தை வரவழையுங்கள்.

3. உங்கள் வீடு எவ்வளவு அன்பாகவும் சுத்தமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு தெய்வ சக்திகள் உங்கள் வீட்டில் தங்குவதற்கு வழிவகுக்கும். தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றி வழிபட்டால் தெய்வ அருளைப் பெறலாம்.

4. குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியம். வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ கோவிலுக்கு சென்று எலுமிச்சம் பழத்தை வாங்கி வந்து வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், தீராத பிணிகள் தீரும்.

5. காலை நேரத்தில் சுப்ரபாதம், கந்த சஷ்டி கவசம் போன்ற ஆன்மீக பாடல்களை கேட்கலாம். இது வீட்டில் நேர்மறை ஆற்றல்களை பரவ செய்யும்.