விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் தொடர் மூலம் நடிக்க துவங்கிவர் ஸ்ரீ. அதன்பின் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், மிஷ்கின் இயக்கிய ஒநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடித்தார்.
வில் அம்பு படம் இவரை அதிகம் பிரபலப்படுத்தியது. இறுதியாக இறுகப்பற்று படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில்தான், அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணத்தோடு அதாவது சட்டை ஏதும் போடாமல், நீண்ட தலைமுடியுடன் அவர் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ‘இவருக்கு என்னாச்சி?’ என விசாரிக்க துவங்கினார்கள். அதோடு, ஸ்ரீக்கு மது மற்றும் போதை மருந்து பழக்கம் ஏற்பட்டிருக்கிறது எனவும் பலரும் பதிவிட்டார்கள். அவரின் வீடியோ வைரலானதால் அவரின் நண்பர்களும் அவரை தேடினார்கள். ஆனால், யாருடைய செல்போன் அழைப்பையும் ஸ்ரீ எடுக்கவில்லை.
ஒருபக்கம் வில் அம்பு மற்றும் இறுகப்பற்று படங்களில் நடித்ததற்கு ஸ்ரீக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அதனால்தான் ஸ்ரீ மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார் என்றும் சிலர் கூறினார். இந்நிலையில், தற்போது ஸ்ரீயின் குடும்பம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ஸ்ரீ-யை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். அவர் இப்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். மருத்துவர்களின் அறிவுரைப்படி சமூகவலைத்தளங்களிலிருந்து அவர் விலகி இருக்கிறார். அவரது உடல் நலம் பற்றிய வதந்திகளை சமூகவலைத்தளங்களில் பரப்ப வேண்டாம். அது அவரின் மனநிலையை பாதிக்கும் என அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையை இயக்குனர் லோகேஷ் கனகராஜும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.