மூலிகைச் செடி என்பது மருத்துவம் ரீதியாகவும் ஆன்மீகம் ரீதியாகவும் பெரிதும் உதவி வருகிறது. என்னதான் காலங்கள் மாறினாலும், புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும் இந்த மூலிகைக்கான மகத்துவம் என்பது எந்த காலத்திலும் மாறாத ஒன்று. இந்த மூலிகை செடியானது நமது வாழ்க்கையில் உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பயன்படும்.
அதாவது மூலிகை என்பதை நாம் உட்கொள்ளும் பொழுது உடல் ரீதியான பிரச்சனைகள் குணமாகும். அதே சமயம் இந்த மூலிகை சம்பந்தமான பொருட்கள் நமது வீட்டில் இருக்கும் பொழுது வீட்டில் உள்ள துஷ்ட சக்திகள், தீய சக்திகள், கண் திருஷ்டிகள் ஆகியவற்றை விலக்கி ஆன்ம ரீதியான பிரச்சனைகளையும் தீர்த்து தரும்.
இந்தப் பதிவில் எந்தெந்த மூலிகை செடிகளை நமது வீட்டில் வைத்துக் கொண்டால், நமது குடும்பத்தில் இருக்கும் பண பிரச்சனைகள் தீர்ந்து பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது குறித்து காண்போம்.
1. பவள மல்லி:
இந்த மலர் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மலராகும். இந்த மலரானது இறைவனுக்காக பிரம்ம முகூர்த்த நேரத்தில் பூக்கும் மலராகும். எனவே இந்த மலரை நாம் நினைக்கும் சமயத்தில் செடியில் இருந்து பறிக்க முடியாது. அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே இது பூத்து உதிர்ந்து விடும்.
எனவே அதிகாலை நேரத்தில் இந்த பவளமல்லி செடிக்கு கீழே வெள்ளை நிற துணியினை விரித்து வைத்து விட வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பூக்கள் அந்த துணியின் மேல் உதிர்ந்து இருக்கும். பூக்கள் உதிர்ந்த பின்னர் அதனை மண் படாமல் எடுத்து, மகாலட்சுமி தாயாருக்கு போட்டு விட வேண்டும்.
இந்த பவளமல்லி செடியின் அடி வேர், அதாவது வடக்கு திசையை நோக்கி செல்லக்கூடிய வேரினை கணித்து எடுத்து வெட்டாமல் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அந்த வேரின் மேல் சிறிதளவு மஞ்சள் மற்றும் பாலை ஊற்றிவிட்டு அந்த வேரில் ஒரு பச்சை நிற கயிறு கட்டி விட வேண்டும்.
அதன் பிறகு இரண்டு கரங்களையும் கூப்பி, உங்களது வேரினை “வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் எடுத்து, எனது கல்லாப் பெட்டியில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த வேரினை தொடர்ந்து ஏழு வெள்ளிக்கிழமை கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபட்டு வர வேண்டும். இறுதியாக ஏழாவது வெள்ளிக்கிழமை இதேபோன்று கற்பூர ஆரத்தி காண்பித்து அவல் பொறி வைத்துவிட்டு தான் அந்த வேரினை வெட்ட வேண்டும்.
அதன் பிறகு அந்த வேரினை பூஜை அறையில் வைத்து அந்த வேரின் மேல் புனுகு, மஞ்சள் மற்றும் ஜவ்வாது ஆகியவற்றை தடவி அதனை ஒரு காப்பு மாதிரி செய்து, கடவுளை வணங்கி விட்டு கல்லாப் பெட்டி அல்லது வீட்டில் பணம் வைக்கக்கூடிய இடத்தில் வைத்துவிட்டால் பணவரவு அதிகரிக்கும்.
2. மருதாணி:
மருதாணி என்பது ஒரு பண வசிய மூலிகை செடி ஆகும். இந்த மருதாணியை அரைத்து பெண்கள் மாதம் மாதம் வருகின்ற மூன்றாம் பிறை நாட்களில் தொடர்ந்து மூன்று மாதங்கள் வைத்துப் பார்த்தாலே உங்களுக்குள் நடக்கும் வித்தியாசத்தை உங்களால் உணர முடியும். பெண்கள் மட்டும் அல்லாமல் ஆண்களும் இந்த மருதாணியை வைத்துக் கொள்ளலாம். இது லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்கும்.
அதேபோன்று இந்த மருதாணி இலைகளை காய வைத்து, வாரத்திற்கு ஒரு முறை சாம்பிராணி தூபம் போடும் பொழுது இந்த மருதாணி இலையையும் போட்டு தூபம் போட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து பணவரவு ஏற்படும்.
3. துளசி:
துளசி செடி என்பது மகாலட்சுமிக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்த துளசி செடியின் மேல் சிறிதளவு மஞ்சள் தூவி விட்டு, தீபம் ஏற்றி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வணங்கி வந்தாலே அந்த வீட்டில் பணப்புழக்கம் என்பது அதிகரிக்கும்.