குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

Photo of author

By Janani

குழந்தை பாக்கியம் பெறுவதற்கு செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த திருச்செந்தூர் பரிகாரம்..!!

Janani

இந்த உலகத்திலேயே இறைவனால் தரப்பட கூடிய பல்வேறு வகையான வரங்களுள் மிகவும் முக்கியமான ஒன்று குழந்தை வரம். திருமணம் ஆன ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறந்து விட்டால் குழந்தையின் அருமை பலருக்கு தெரிவதில்லை. ஆனால் திருமணம் ஆகி 10 வருடம், 20 வருடம் என குழந்தை பாக்கியம் பெறாமல் இருப்பவர்கள் குழந்தைக்காக ஏங்கி பல்வேறு வகையான பரிகாரங்கள், சிகிச்சைகள் போன்றவற்றை செய்து குழந்தைக்காக காத்திருப்பார்கள்.

அவர்களது ஆசையை நிறைவேற்றி தரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம்தான் இந்த முருகனுடைய பரிகாரம்.முருகனை வேண்டி தான் பலரும் குழந்தைக்காக விரதம் இருப்பர். சொல்லப்போனால் முருகனை நம்பி தான் நிறைய பெண்மணிகள் குழந்தை வரத்திற்காக காத்திருக்கின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சையை தொடர்ந்து கொண்டே முருகனை நம்பி இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது கண்டிப்பாக குழந்தை வரம் கிடைத்துவிடும்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு புதன்கிழமை நாட்களில் செல்வது நல்லது. புதன்கிழமை இரவு 7:30 மணி அளவில் “ஏகாந்தம் தரிசனம்” என்பது நடைபெறும். உலக நன்மைக்காக அந்த தரிசனம் நடத்தப்படுகிறது. அந்த தரிசனத்தின் பொழுது முருகப்பெருமான் சந்தன காப்பில் காட்சி அளிப்பார்.

அந்த சந்தன காப்பில் முருகப்பெருமான் மிகவும் பூரிப்புடன் காட்சியளிப்பார். எனவே அந்த தரிசனத்தின் பொழுது பக்தர்கள் என்ன கேட்டாலும் அதனை வாரி வழங்கி விடுவார் என்பது ஐதீகம். எனவே இந்த ஏகாந்த தரிசனத்தின் பொழுது மனதார உங்களுக்கு வேண்டியதை வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த ஏகாந்த தரிசனத்தின் பொழுது கொடுக்கக்கூடிய விபூதியை மிகவும் பயபக்தியுடன் பெண்கள் வாங்கி வந்து தொடர்ந்து 48 நாட்கள் அடி வயிற்று பகுதியில் தேய்த்துக் கொள்வதன் மூலம் குழந்தை பாக்கியத்தை பெற முடியும். அதனுடன் முறையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவும் வேண்டும்.

அதாவது குழந்தை பாக்கியத்திற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அந்த சிகிச்சை முறையை தொடர்ந்து கொண்டே, முருகனின் மீது முழு நம்பிக்கை வைத்து அந்த விபூதியை தொடர்ந்து 48 நாட்கள் தேய்த்துக் கொள்ள வேண்டும். இடையில் மாதவிடாய் நாட்கள் வந்தால் அதனை கணக்கில் எடுத்து கொள்ளக் கூடாது. சுத்தபத்தமாக இருக்கக்கூடிய நாட்களை மட்டுமே கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும்.

புதன்கிழமை இரவு ஏகாந்த தரிசனம் முடித்த பின்னர், “பள்ளியறை பூஜை” நடைபெறும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கண்டிப்பாக இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுத்த நாள் அதாவது வியாழன் கிழமை அதிகாலை 4:30 மணி அளவில் “விஸ்வரூபம்” என்னும் தரிசனம் நடைபெறும். அந்த தரிசன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வேண்டும்.

விஸ்வரூபம் என்பது அதிகாலை முருகனின் கண்களை திறக்கும் பொழுது அவர் யாரை முதலில் பார்க்கிறாரோ, அவர்களுக்கு முருகனின் அருள் கிடைக்கும் என்றும் அவர்கள் கேட்கும் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த விஸ்வரூப தரிசனத்தின் பொழுது இலை பிரசாதம் என்பதை கொடுப்பார்கள், அதனையும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வீட்டிற்கு வாங்கி வர வேண்டும்.

இவ்வாறு திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கி, முருகனின் அனைத்து தரிசன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு கொடுக்கக் கூடிய விபூதியை, குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள் தொடர்ந்து 48 நாட்கள் அடிவயிற்றில் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கண்டிப்பாக குழந்தை பாக்கியத்தை பெறுவார்கள்.