நவீன் இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் மூடர் கூடம். நெல்சனுக்கு முன்பே தமிழ் சினிமாவில் டார்க் ஹியூமர் என்கிற வகை திரைப்படமாக மூடர் கூடம் வெளியானது. 4 பேர் ஒரு பாரில் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது அவர்கள் எல்லோரும் நண்பர்களாக மாறி ஒரு பணக்காரரிடம் இருந்து பணத்தை திருட திட்டமிடுவார்கள்.
இந்த படத்தில் செண்ட்ராயன், குபேரன், ராஜாஜி, ஓவியா, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2013ம் வருடம் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. அதன்பின் விஜய் ஆண்டனியை வைத்து அக்னி சிறகுகள் என்கிற படத்தை இயக்கினார். கொளஞ்சி என்கிற படத்தை தயாரித்தும் இருந்தார். இந்த படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருந்தார். சங்கவி என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தர்.
ஆனால், இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் பண்ணும் வேலையில் படக்குழு இறங்கியுள்ளது. மூடம் கூடம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகியும் நவீனின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில்தான் மூடர் கூடம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறாராம் நவீன்.
இந்த படத்தில் நவீன், செண்ட்ராயன் என பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், விஜய் ஆண்டனியை வைத்து நவீன் இயக்கியுள்ள அக்னி சிறகுகள் படமும் விரைவில் கொண்டுவரும் வேலையையும் படக்குழு துவங்கியுள்ளது.