உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

Photo of author

By Janani

உங்களுடைய ராசிப்படி இந்த தெய்வத்தின் குணத்தை தான் நீங்கள் பெற்றிருப்பீர்கள்..!!

Janani

Updated on:

1. மேஷம்:

முருகனைப் போல் துணிச்சலையும், தைரியத்தையும் கொண்டவர்கள் தான் மேஷம் ராசிக்காரர்கள். எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை தகர்த்துவிட்டு வெற்றியைக் காண்பார்கள். துணிவு அவர்களது ரத்தத்தில் கலந்து இருக்கும். எனவே எந்த ஒரு செயலையும் பயமின்றி செய்யலாம்.

2. ரிஷபம்:

லட்சுமி தேவியை போல் பொறுமையையும், கடின உழைப்பையும், செழிப்பையும் பெற்றிருப்பார்கள் ரிஷப ராசிக்காரர்கள். முயற்சி உங்களுக்கு நிலையான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உழைப்பின் மூலம் வளம் சேரும். எனவே லட்சுமி தேவியை போல் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

3. மிதுனம்:

நாராயணன் போல் புத்திசாலித்தனமும், வியூகத் திறனும் கொண்டவர்கள் தான் மிதுனம் ராசியினர். எந்த சூழ்நிலையிலும் யோசனையின் மூலம் வெற்றி பெறுவீர்கள். அறிவே உங்களுடைய சக்தி. விஷ்ணுவை போல் யூகமாக உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள்.

4. கடகம்:

ராமர் போல் நேர்மை, செழிப்பு, குடும்ப அக்கறை போன்றவற்றை கொண்டவர்கள் தான் கடக ராசியினர். அன்பிலும், பெருமையிலும் சாமர்த்தியம் கொண்டவர்கள். உண்மை மற்றும் தர்மம் தான் உங்களுடைய வலிமை. எனவே ராமரை போல் நேர் வழியில் சென்று வெற்றி காணுங்கள்.

5. சிம்மம்:

சூரிய நாராயணன் போல் பிரசன்ன ஆளுமையும், உயர்ந்த எண்ணங்களையும் கொண்டவர்கள் தான் சிம்மம் ராசிக்காரர்கள். எந்த ஒரு இடத்திலும் தலைமைத்துவம் அமைத்து முன்னேறுவார்கள். நீங்கள் ஒரு தலைவர். எனவே சூரிய நாராயணன் போல் ஒளியை பரப்புங்கள்.

6. கன்னி:

கிருஷ்ணர் போல் புத்திசாலித்தனமும், கலை ஞானமும், யோசனை திறனும் கொண்டவர்கள் தான் கன்னி ராசியினர். எதை செய்தாலும் அன்புடனும், சரியான திட்டத்துடனும் செய்வார்கள். தெளிவு மற்றும் தர்மம் தான் உங்களுடைய அடையாளம். எனவே கிருஷ்ணரை போல் சிந்தித்து செயலாற்றுங்கள்.

7. துலாம்:

அஷ்டலட்சுமி தேவி போல் சமத்துவம், அழகு, செழிப்பில் வாழ்பவர்கள் தான் துலாம் ராசியினர். மற்றவர்களை மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் வைத்துக் கொள்வார்கள். சமநிலை தான் உங்களுடைய வெற்றி. லட்சுமி தேவியின் ஆசிர்வாதத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

8. விருச்சிகம்:

ஆறுமுக முருகனைப் போல் பயமற்ற சக்தியினை கொண்டவர்கள் தான் விருச்சிக ராசிக்காரர்கள். கடுமையான சூழ்நிலையிலும் உறுதியுடன் செயல்படுவார்கள். வீரம் தான் உங்களுடைய அடையாளம். முருகனைப் போல் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று செயல்படுங்கள்.

9. தனுசு:

பரசுராமர் போல் தீர்மானம் சிந்தனை கடமை உணர்வு ஆகியவற்றை கொண்டவர்கள் தான் தனுசு ராசியினர். எந்த சவாலாக இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றியை காண்பார்கள். உறுதி தான் உங்களுடைய அடையாளம். பரசுராமரைப் போல் தர்மத்திற்காக போராடுங்கள்.

10. மகரம்:

மீனாட்சியம்மன் போல் செழிப்பு, நுட்ப அறிவு, தீர்க்க தரிசனம் ஆகியவற்றை கொண்டவர்கள் தான் மகரம் ராசியினர். கடின உழைப்பால் உயர்வை அடைவீர்கள். நீங்கள் உழைத்தால் வெற்றி நிச்சயம். எனவே மீனாட்சி அம்மன் போல் வலிமையுடன் இருங்கள்.

11. கும்பம்:

ஆஞ்சநேயர் போல் நம்பிக்கையும், ஆற்றலும் கொண்டவர்கள் தான் கும்பம் ராசிக்காரர்கள். எந்த மனநிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் இவர்களிடம் இருக்கும். நம்பிக்கை தான் உங்களுடைய சக்தி. ஆஞ்சநேயர் போல் பக்தியுடன் இருங்கள்.

12. மீனம்:

பிரம்ம தேவர் போல் கற்பனை திறனும், புத்திசாலித்தனமும், அறிவும் நிறைந்தவர்கள் தான் மீனம் ராசியினர். புதிய விஷயங்களை உருவாக்கும் திறமை கொண்டவர்கள். உங்களுக்கு தெய்வீக ஞானம் உள்ளது. பிரம்ம தேவரை போல் சிந்தித்து செயல்படுங்கள்.