திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ மதிமுக என்கிற கட்சியை பல வருடங்களுக்கு முன்பே துவங்கினார். அதன்பின் அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதியை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். ஒருபக்கம், தமிழகமெங்கும் நடை பயணும் மேற்கொண்டார்.
தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த வைகோ கடந்த சில வருடங்களாக வயது மூப்பு காரணமாக கொஞ்சம் விலகி இருந்தார். அதேநேரம், பாராளுமன்றத்தில் எம்.பி.யாக சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஒருபக்கம், சில வருடங்களுக்கு முன்பு வைகோவின் மகன் துரை கட்சிக்குள் வந்தார். மதிமுக முதன்மை செயலர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென மதிமுக முதன்மை செயலர் பொ|றுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்தியாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய மதிமுக நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஒருபக்கம், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ நடத்தும் நாடகம் இது. நடக்கவுள்ள கூட்டத்திலும் மல்லை சத்யா தனிமைப்படுத்துவார். இது ஒரு அரசியல் நாடகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர்.
இந்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ. மல்லை சத்யா – துரை வைகோ இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. கட்சி பணிகளை தொடர் இருவருக்கும் வைகோ அறிவுறுத்தியிருக்கிறார்.