மதிமுக முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று காலை திடீரென அறிவித்தார். மதிமுக நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நேரத்திற்கு முன்பு துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுளது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, அவருக்கு மல்லை சத்யாவுடன் கருத்து மோதல் இருந்தது. உட்கட்சி பூசல் காரணமாகவே துரை வைகோ இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கருதப்பட்டது. அதேநேரம், நேற்று காலை கூடிய நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நீக்க துரை வைகோ நடத்தும் நாடகம் இது. நாளை நடக்கவுள்ள கூட்டத்திலும் மல்லை சத்யா தனிமைப்படுத்துவார். இது ஒரு அரசியல் நாடகம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர். அவர்கள் சொன்னது போலவே மதிமுக முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை வாபஸ் பெற்றார் துரை வைகோ. மல்லை சத்யா – துரை வைகோ இடையேயான சமாதான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. கட்சி பணிகளை தொடர் இருவருக்கும் வைகோ அறிவுறுத்தியிருக்கிறார்.
அதாவது மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும் இடையே உள்ள பிரச்சனையை இருவரும் பேசவிட்டு வைகோ சரி செய்துவிட்டார் என்கிறார்கள். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா ‘எனது செயல்கள் உங்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். முதன்மைச் செயலாளராக தொடர வேண்டும் என்று துரை வைகோவிடம் கூறினேன்.
மறுபரீசலனை செய்து தொடர்வதாக கூறியிருக்கிறார். இணைந்த கைகளுக்கு எப்போதும் வலிமை அதிகம். கட்சி பணிகளுக்காக இருவாரும் இணைந்து செயல்படுவோம்’ என சொல்லியிருக்கிறார். இதைத்தொடர்ந்து துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்திருக்கிறது.