போறதுண்ணா போங்க.. ஆனா என் தம்பி விஜய் உங்களை சேர்த்துக்க மாட்டார்!.. சீமான் ஃபீலிங்!…

Photo of author

By அசோக்

போறதுண்ணா போங்க.. ஆனா என் தம்பி விஜய் உங்களை சேர்த்துக்க மாட்டார்!.. சீமான் ஃபீலிங்!…

அசோக்

seeman

நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் சீமான். அதிமுக, பாஜகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வருபவர் சீமான்தான். மேடைகளில் மிகவும் ஆக்ரோஷமாக பேசி அதிர வைப்பார். இவரின் பேச்சில் மயங்கியே பலரும் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தன்னை தமிழ் தேசியவாதியாக காட்டிகொள்பவர் சீமான்.

ஒருபக்கம், சீமானின் பேச்சும், செயல்பாடும் பிடிக்காமலேயே கட்சியிலிருந்து பல முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களில் வெளியேறி விஜயின் கட்சிக்கு போய்விட்டார்கள். விஜய் கட்சி துவங்கியவுடன் அவருடன் இணைந்து செயல்படுவது போல காட்டிக்கொண்டார். ஆனால், விஜய் திராவிடத்தை ஏற்பதாக சொன்னதும் கடுப்பாகி அவரை திட்ட துவங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால் அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை போட துவங்கிவிட்டார்கள். இதில் முதலாவதாக அதிமுக – பாஜக கூட்டணி உருவாகிவிட்டது.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படும் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவாரா என்பதும் தெரியவில்லை. அதேபோல், வழக்கம்போல் சீமான் யாருடணும் சேராமல் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவார் எனத்தெரிகிறது. பாஜகவிலிருந்து அழைப்பு வந்தும் சீமான் அதை நிராகரித்துவிட்டார்.

சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய சீமான் ‘2026 சட்டமன்ற தேர்தலில் நான் சொல்பவர்கள்தான் வேட்பாளர்கள். நான் சொல்வதையும் மீறி தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி விஜயின் கட்சிக்கு சென்றுவிடுங்கள். விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.. நானே சேர்த்துவிடுகிறேன்’ என பேசியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ‘நாம் தமிழர் கட்சியினர் வேறு கட்சிக்கு போவதில் என் தம்பி விஜய் கட்சிக்கு போகட்டும். அவர் உங்களை சேர்த்துக்கொள்ளமாட்டார் என்கிற தைரியத்தில்தான் இதை சொல்கிறேன். அண்ணனையே இந்த பாடு படுத்திவிட்டர்கள் என்று நினைத்து உங்களை அவர் சேர்க்கமாட்டார்’ என கூறினார். பாமக மாநாட்டிற்க்கு அழைத்தால் போவீர்களா?’ என்கிற கேள்விக்கு ‘பாமக மாநாட்டிற்கு என்னை அழைத்தால் மேடையில் ஏறிப் பேசுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை’ என பதில் சொல்லியிருக்கிறார்.