வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

Photo of author

By Janani

வீட்டில் எந்தெந்த நாட்களில் விளக்கு ஏற்றக் கூடாது என்று தெரியுமா..??

Janani

அனைவரது இல்லத்திலும் காலை மற்றும் மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. ஏனென்றால் அந்த தீப ஒளி வீட்டில் இருக்கும் இருளை நீக்கி குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது ஐதீகம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தீபத்தை ஒரு சில நாட்களில் ஏற்றக்கூடாது என்ற முறைகளும் உள்ளது. அது எந்தெந்த நாட்கள் என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காண்போம்.

குறிப்பிட்டு சில நாட்களில் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது என்ற வரைமுறைகள் உள்ளன. இதனை சிலர் அறிந்திருந்தாலும் பலர் அறியாமல் இருப்பர். வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது அந்த வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்து, சுபிட்சம் உண்டாகும். ஆனால் தீபம் ஏற்ற கூடாத நாட்களில் தீபத்தை ஏற்றினால் அது அபசகுனமாக மாறிவிடும். எனவே எந்தெந்த நாட்களில் தீபம் ஏற்றக்கூடாது என்பதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.

1.உங்களுக்கு மிகவும் நெருங்கிய உறவுகளான பங்காளிகள், அதாவது ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள் யாராக இருந்தாலும் இறப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக அடுத்த 16 நாட்களுக்கு உங்கள் வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது. ஏனென்றால் இது இறப்பு தீட்டு என்று கூறப்படும். இதுபோன்ற தீட்டு காலங்களில் தீபம் ஏற்றக்கூடாது.

ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளிடம் பேசுவதில்லை என்றாலும் கூட ,அவர்களது வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண்டிப்பாக 16வது நாள் காரியம் முடியும் வரையிலும் தீபம் ஏற்றக்கூடாது. அதேபோன்று சுப காரியங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது.

2.உங்களது தெருக்களில் அல்லது ஊர்களில் யார் என்று தெரியாதவர்களாக இருந்தாலும் கூட, உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சமயத்தில் அவர்களின் இறப்பு சடங்கு முடியும் வரையிலும் உங்களது வீட்டில் தீபம் ஏற்றக்கூடாது.

ஒரு தெருவில் இறப்பு ஏற்பட்டால் அந்த ஊரில் உள்ள கோவில்களில் அன்று பூஜை நடக்காது, கோவில் நடையையும் திறக்க மாட்டார்கள். அது போன்று தான் உங்களது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபடக் கூடாது.

3. அதேபோன்று உங்களது வீட்டில் யாருக்கேனும் குழந்தை பிறந்து இருந்தாலும் அதுவும் ஒரு தீட்டாகத் தான் கருதப்படும். எனவே அந்த குழந்தை பிறந்தது முதல் அந்த குழந்தைக்கு புண்ணியாதானம் செய்யும் வரையிலும் அந்த வீட்டில் தீபம் ஏற்றக் கூடாது.

இதுபோன்ற தீட்டு காலங்களில் வீட்டில் தீபம் ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தீட்டு காலங்கள் முடிந்து வீட்டை சுத்தம் செய்த பின்னர் தீபம் ஏற்றுவது தான் சரியான முறையாகும். அப்பொழுது தான் குடும்பத்தில் எந்த ஒரு தோஷமும் ஏற்படாமல் குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.