தீராத கஷ்டங்கள் என்பது வேறு, தீராத துயரத்தை தரும் மன வேதனை என்பது வேறு. ஒரு விஷயத்தை நினைத்து மனதுக்குள் புழுங்கி புழுங்கி நொந்து போகும் அளவுக்கு கூட சிலருக்கு பிரச்சனைகள் இருக்கும். ஆனால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஒரு எளிய பரிகாரம் அதற்கான தீர்வை கொடுத்து விடும்.
இதனை தெரியாமல் பலரும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய பதிவுதான் இது. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு முழு நம்பிக்கை தான் மூலாதாரம். இந்த பரிகாரத்திற்கும் அப்படித்தான் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் இந்த ஒரு பொருளை எடுத்து தண்ணீரில் கரைத்து விடும் பொழுது, உங்களது கஷ்டங்கள் அனைத்தும் கரைந்து போகும்.
இந்த பரிகாரம் செய்வதற்கு மண்டை வெல்லம் என்று சொல்லக்கூடிய வெல்லத்தை கடையிலிருந்து புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குலதெய்வ கோவிலில் இருக்கும் குளத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது உங்களது இஷ்ட தெய்வம் இருக்கும் கோவிலில் உள்ள குளத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மீன்கள் இருக்கக்கூடிய கோவில் குளத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நிச்சயம் 100% பலன் கொடுக்கும்.
அந்த மண்டை வெல்லத்தை உங்கள் கையாலையே வாங்கி, உங்கள் கையினாலே குளத்தில் கரைத்து விட வேண்டும். வெல்லத்தை அப்படியே தூக்கி கொட்ட கூடாது. ஒரு கைப்பிடி அளவு வெள்ளத்தை எடுத்து, உங்களது கை தண்ணீரில் மூழ்கும் படி அந்த வெல்லத்தை கரைக்க வேண்டும். அந்த வெல்லம் கரைவது போல உங்களுடைய கஷ்டங்களும் கரைந்து போக வேண்டும் என்று உங்களது குலதெய்வத்திடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் சேர்த்து அந்த குளத்தில் இருக்கும் மீன்களுக்கு பொறி போன்ற ஏதேனும் ஒரு உணவை வழங்க வேண்டும். அந்த மீன்கள் நீங்கள் போட்ட உணவை உண்ணும் பொழுது, உங்களுடைய கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். தீராத நோய்கள், தீராத வினைகள், தீராத கஷ்டங்கள், தீராத மன அழுத்தம் இப்படி பல நாட்களாக உங்களுக்குள் இருந்த மன கஷ்டத்தை போக்கக்கூடிய பரிகாரம் தான் இந்த பரிகாரம். நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் பலன் உண்டு.
குழப்பம் தீர்ந்து தெளிவான முடிவை எடுக்க செய்ய வேண்டிய பரிகாரம்:
ஒரு செயலை குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளீர்களா? தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை, ஆயிரம் பேர் கிட்ட கருத்துக்கள் கேட்டாலும் தெளிவான ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்று நினைக்கும் பொழுது உங்களது குழப்பம் தீர இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இந்த பரிகாரம் செய்வதற்கு ஐந்து முதல் ஆறு கருந்துளசி செடியின் இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சின்னதாக படிகார கல் தேவை. இந்த இரண்டு பொருளையும் ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டி தலையணைக்கு அடியில் வைத்து அன்று இரவு தூங்குங்கள். மறுநாள் காலையில் எழும்பொழுது உங்களது மனம் தெளிவு பெறும். குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள். பிரச்சனைக்கு உண்டான தீர்வை எளிதில் எடுத்து விடுபவர்கள்.
இதுஒரு எளிய பரிகாரம் தான். ஆனால் இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும் பொழுது, நல்ல ஒரு மாற்றத்தை உணருவீர்கள். பிரச்சனை சரியாகி விட்டது என்றால், அந்த பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட்டு வர வேண்டும்.
அதே போன்று தொடர்ந்து மூன்று நாட்கள் கருந்துளசியின் இலைகளை கசக்கி அதிலிருந்து சாற்றினை எடுத்து, நெற்றியில் பூசிக்கொண்டு தூங்குவதன் மூலம் குழப்பங்கள் தீர்ந்து மனம் தெளிவடையும்.