விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

Photo of author

By Janani

விநாயகருக்கு இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம், நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் உங்களது வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்..!!

Janani

7 நாட்கள் விநாயகர் பெருமானை வேண்டி இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம், நடக்கவே நடக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் கூட நிறைவேறி விடும். பொதுவாக சில வீடுகளில் ஒரு சில விஷயங்கள் தடைபட்டுக் கொண்டே போகும். அது திருமண தடையாக இருக்கலாம், குழந்தை பாக்கியம், வேலையின்மை இது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நிறைய விஷயங்கள் நடந்து முடிந்து விடும் என்று நினைக்கின்ற பொழுது தடைபட்டு போய்விடும். அதாவது கைகூடும் நேரத்தில் தட்டிக் கழித்துக் கொண்டே போகும். இவ்வாறு நடப்பதற்கு முக்கிய காரணம் உங்களது வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் தான். இந்த எதிர்மறை சக்திகளை விரட்டி அடித்து நேர்மறையான சக்திகளை வீட்டில் உருவாக்குவதன் மூலம் நீங்கள் நினைத்தது நிறைவேறும். மேலும் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்கான சூழ்நிலை உண்டாகும்.

நம்மிடம் நேர்மறையான சக்திகள் அதிகரிக்கவும், நாம் நினைத்தது நிறைவேறவும் நமக்கு உறுதுணையாக இருப்பது முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமாள் தான். அவரது அருள் இருந்தால் மட்டுமே நாம் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். விநாயகப் பெருமானுக்கு செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்ய வேண்டும்.

அந்த பரிகாரத்தை தொடங்கும் பொழுது இடையில் எந்த ஒரு தடைகளும் வந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதற்கு ஏற்றார் போல் உங்கள் பரிகார நாளை தொடங்க வேண்டும். பெண்களாக இருந்தால் இடையில் மாதவிடாய் நாட்கள் வந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களது குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப உங்களது நாளை நீங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அனைவரது வீட்டிலும் விநாயகரது திருவுருவப்படம் கண்டிப்பாக இருக்கும். அந்த திருவுருவப்படத்திற்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து அவருக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்ற வேண்டும். அது நெய் தீபமாக இருந்தாலும் சரி, நல்லெண்ணெய் தீபமாக இருந்தாலும் சரி அது உங்களது வசதியை பொருத்தது. ஆனால் தீபம் ஏற்றும் பொழுது அந்த திரியில் வெட்டி வேரையும் சேர்த்து திரித்து ஏற்ற வேண்டும்.

இந்த வெட்டி வேரானது நாட்டு மருந்து கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள்தான். இந்த வெட்டிவேரை வாங்கி வந்து விநாயகருக்கு ஏற்றக்கூடிய அந்த தீபத்தில் வெட்டிவேரையும் சேர்த்து திரித்து ஏற்ற வேண்டும். அதனுடன் அருகம்புல்லையும் விநாயகருக்கு சாத்த வேண்டும்.

முதல் நாள் சாத்திய அருகம்புல்லை கால் படாத இடத்தில் வைத்துவிட்டு, ஒவ்வொரு நாளும் புதியதாக அருகம்புல்லை சாத்த வேண்டும். அதே போன்று அந்த திரியையும் மாற்றி விட வேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆனால் ஏழு நாட்கள் வேண்டக்கூடிய பிரார்த்தனையும் ஒரே பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.

அதாவது திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், நல்ல வேலை வேண்டும் என்று உங்களுக்கு என்ன வேண்டுமோ, அந்த ஒன்றை மட்டுமே குறிக்கோளாக வைத்து இந்த ஏழு நாட்களும் வழிபாடு செய்ய வேண்டும். இதுவரை நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்களும் கண்டிப்பாக இந்த ஒரு வழிபாட்டின் மூலம் நிறைவேறும்.

இந்த வழிபாட்டின் பொழுது விநாயகருக்கு உரிய காயத்ரி மந்திரத்தை கூறும் பொழுது மேலும் சிறப்பை தரும்.

“ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்”

இந்த காயத்ரி மந்திரத்தை 1 முறையோ, 8 முறையோ அல்லது 108 முறையோ உங்களது விருப்பத்திற்கு ஏற்ப கூறிக் கொள்ளலாம். ஆனால் 7 நாட்களும் தொடர்ந்து இந்த ஒரு தீபத்தை மட்டும் கட்டாயம் ஏற்ற வேண்டும்.