பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

Photo of author

By Janani

பணம் பெருகவும், வாஸ்து பிரச்சனை நீங்கவும் மஞ்சளை வைத்து செய்யக்கூடிய 10 பரிகாரங்கள்..!!

Janani

இயற்கையான கிருமி நாசினியாக இருக்கும் மஞ்சள் ஆனது அனைத்து வீட்டின் சமையலறையிலும், பூஜை அறையிலும் கண்டிப்பாக இருக்கும். அதேபோன்று சுப காரியங்கள் அனைத்தும் மஞ்சள் இல்லாமல் முழுமை அடையாது. ஜோதிடத்தின் படி மஞ்சளானது குருபகவானின் அம்சம் கொண்டது. மேலும் இது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

இந்த மஞ்சளை சில நோய்களுக்கும், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் நேரடியாக பயன்படுத்தலாம். அதுபோலவே வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யவும், நிதி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் இந்த மஞ்சள் பெரிதும் பயன்படுகிறது. இந்த மஞ்சளை வைத்து செய்யக்கூடிய பூஜை, பரிகாரங்கள், வழிபாடுகள் ஆகிய அனைத்தும் மிகுந்த சக்தி நிறைந்ததாக இருக்கும்.

இப்படிப்பட்ட மஞ்சளை வைத்து வீட்டில் இருக்கும் பண பிரச்சனைகளையும், வாஸ்து பிரச்சனைகளையும் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.

1. மஞ்சள் என்பது குரு பகவானின் அம்சம் கொண்டது. எனவே இந்த மஞ்சளை நம்முடன் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. இதனால் உங்களுடைய வலிமை அதிகரிக்கும். இந்த மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு குருபகவானின் மந்திரங்களை கூறும் பொழுது, வாழ்க்கையில் பல நன்மைகள் உண்டாகும்.

2.குரு பலன் குறைவாக இருக்கும் ஜாதக அமைப்பை கொண்டவர்கள் குருவின் அருளைப் பெற, வியாழன் கிழமை தோறும் பச்சை மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்து, அதனை மஞ்சள் துணியில் வைத்து கையில் கட்டி கொண்டால் குரு பலன் கூடும்.

3.வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டவும் மஞ்சள் பயன்படுகிறது. நிதி மற்றும் பொருளாதார பிரச்சனைகளை நீக்குவதில் மஞ்சள் முக்கியத்துவம் வகிக்கிறது. அதேபோன்று மஞ்சள் உடன் கிராம்பு சேர்த்து பயன்படுத்தும் பொழுது அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

4.வாஸ்து பிரச்சனைகள் நீங்க வேண்டும் என்றால் 15 நாட்கள் தொடர்ந்து மஞ்சள் கலந்த நீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால் நல்ல ஒரு மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

5.வீட்டின் முன்பாக சுவஸ்திக் சின்னத்தை மஞ்சள் மூலம் போட்டு வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

6.ஐந்து மஞ்சள் துண்டுகளுடன் சிறிது அரிசியை சேர்த்து, ஐந்து அடி நீளம் உள்ள ஒரு மஞ்சள் நிற துணியில் இதனை கட்டி வீட்டில் மங்களகரமான ஒரு இடத்தில் வைக்கும் பொழுது, தன காரகனான குருவின் பலம் அதிகரித்து வீட்டில் செல்வம் சேரும்.

7.வியாழன் கிழமை தோறும் குளிக்கும் நீரில் சிறிதளவு மஞ்சள் தூளை கலந்து குளித்து வந்தால் உடல் மற்றும் மனம் தூய்மை அடையும். அதேபோன்று மஞ்சள் தூளினால் திலகம் இட்டு கொண்டு வெளியே செல்லும் பொழுது, உங்களது வேலை மற்றும் தொழில் முயற்சிகள் ஆகிய அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

8.புதியதாக ஒரு வேலையில் சேர செல்லும் பொழுது மஞ்சள் திலகம் இட்டு சென்றால் நல்ல ஒரு வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கணக்கு வழக்குகள் பார்க்கும் புத்தகத்தில் மஞ்சள் தூளை தெளித்து விட்டால் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும்.

9.வியாபாரத்தில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு கொண்டே இருந்தால், வளர்பிறையில் வரும் முதல் வியாழன் கிழமை அன்று
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ”என்று 108 முறை சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். ஒரு மஞ்சள் துணியில் கருப்பு மஞ்சள், கோமதி சக்கரம் ஆகியவற்றை சேர்த்து அதனை ஒரு கருப்பு நிற துணியில் கட்டி வைக்க வேண்டும். இது வியாபாரத்தில் இருக்கும் சிக்கல்களை போக்கும்.

10.ஒரு வெள்ளிக்கிழமை நாளில் குங்குமச்சிமிழில் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்கும பூவை சேர்த்து மகாலட்சுமி தாயின் பாதத்தில் வைத்து பூஜை செய்து அவனை பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த அடுத்து வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் லட்சுமி தேவியின் முன்பு வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். பண வரவும் அதிகரிக்கும்.