கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர்.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரக்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.
அதோடு, பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் தூதரகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகலை டெல்லி காவல்துறை அகற்றியுள்ளது.
இந்நிலையில், பரபரப்பான சூழ்நிலை நிலவும்போது பாகிஸ்தான் தூதகரத்தை சேர்ந்த ஒருவர் கேக் வாங்கிகொண்டு உள்ளே செல்லும் புகைப்டமும், வீடியோவும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்க்கும்போது 23 இந்தியர்கள் தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்ததை பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கொண்டாடுவது போல இருக்கிறது என பலரும் கோபத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுவரை பாகிஸ்தான் தூதரகம் இதுபற்றி விளக்கமளிக்கவில்லை.