குடும்பத்தில் இருக்கும் பெண்கள் செய்யக்கூடிய சில முக்கியமான விஷயங்களின் மூலமாக குடும்பம் முன்னேற்றம் அடையும், பணவரவும் அதிகரிக்கும். அதேபோன்றுதான் பெண்கள் சில முக்கியமான விஷயங்களை மற்றவர்களிடம் கூறும் பொழுது குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, பண பற்றாக்குறை ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தி கொடுத்து விடும். அது என்னென்ன விஷயங்கள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
1.முதலாவதாக நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதனை வேறு யாரிடமும் கூறக் கூடாது. குண்டூசி முதல் தங்கம் வரை நீங்கள் எந்த பொருட்கள் வாங்குவதாக இருந்தாலும் சரி, வாங்குவதற்கு முன்பாக அதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது. ஒரு விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதாக இருந்தால் அதற்காக பணம் சேர்த்து வருகிறேன் என்று மற்றவர்களிடம் கூறும் பொழுது அந்தப் பொருளை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.
நீங்கள் மற்றவர்களிடம் கூறிய நேரத்தில் இருந்து ஏதேனும் ஒரு புதிய பிரச்சினைகள் உங்கள் குடும்பத்திற்கு வரத் தொடங்கி இருக்கும். அந்தப் பிரச்சினைக்காக அந்த பணத்தை செலவிட நேரிடும். இறுதியாக நீங்கள் நினைத்த பொருளை வாங்க முடியாமல் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். ஒருவேளை அந்த பொருளை நீங்கள் வாங்கி விட்டாலும் கூட, கண் திருஷ்டியின் காரணமாக அது விரைவில் உங்களது கையை விட்டு போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
2. இரண்டாவதாக உங்களுடைய வருமானத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. குடும்பத்தில் இருக்கும் யாருடைய வருமானமாக இருந்தாலும் சரி, அந்த விவரத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது. எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் கூறக்கூடாது.
வருமானம் இவ்வளவு வருகிறது, செலவு போக இவ்வளவு சேமித்து வைக்கிறேன் என்று எந்தவித தகவலையும் மற்றவர்களிடம் கூறக்கூடாது. கண் திருஷ்டியின் காரணமாக வருமானம் குறைய வாய்ப்புகள் உண்டு அல்லது பணத்தை சேமிக்க முடியாமல் போய்விடும்.
3. பெண்கள் கருவுற்றிருந்தால் அதனை வேறு யாரிடமும் கூறக்கூடாது. பெண்களுக்கு கடவுள் கொடுக்கின்ற ஒரு பெரிய வரம் என்றால் அது தாய்மை தான். எனவே இந்த விஷயத்தை ஒரு மூன்று அல்லது ஐந்து மாதத்திற்கு பிறகு தான் வெளி ஆட்களிடம் கூற வேண்டும். கணவர் வீடு மற்றும் அம்மா வீட்டில் கூறலாம். ஆனால் வெளி ஆட்களிடம் கண்டிப்பாக கூற கூடாது. ஏனென்றால் இதுவும் ஒரு கண் திருஷ்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.
4. நான்காவதாக அடுத்தவர்களிடம் அதிகம் பேசக்கூடாது. பெண்கள் அனாவசியமாக எங்கேயும் எதனையும் பேசக்கூடாது. முக்கியமாக குடும்பத்தில் நடக்கக்கூடிய பிரச்சனைகள் மற்றும் நிகழ்வுகளை வேறு யாரிடமும் கூறக்கூடாது. ஏனென்றால் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
எனவே நீங்கள் அளவுக்கு அதிகமாக பேசும் பொழுது அது பிரச்சினையை தான் ஏற்படுத்துமே தவிர, உங்களுடைய பிரச்சினைக்கான தீர்வாக அது அமையாது. மேலும் உங்களது குடும்பத்திலும் வீண் சண்டைகள் ஏற்படாது.
5. கணவன் மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள் மற்றும் அன்யோன்ய உறவுகள் போன்ற எதையும் வேறு யாரிடமும் கூறக்கூடாது. அது கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி கணவன் மனைவிக்குள் நடக்கும் எந்த ஒரு விஷயத்தையும் வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது.
கணவன் மனைவிக்கு இடையே மிகப்பெரிய சண்டை என்றால், அந்த குடும்ப உறுப்பினர்களிடம் மட்டும் கூறலாமே தவிர வெளி ஆட்கள் யாரிடமும் கூறக்கூடாது. மேலும் அன்யோன்ய உறவை மற்றவர்களிடம் கூறும் பொழுது, மற்றவர்களின் பொறாமை மற்றும் கண் திருஷ்டி குணத்தால் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் உருவாக கூடும்.
மேலே கூறிய ஐந்து விஷயங்களையும் மற்றவர்களிடம் கூறும் பொழுது கண் திருஷ்டி மற்றும் பொறாமை தான் உருவாகுமே தவிர, அது உங்களது குடும்பத்திற்கு நல்லதாக அமையாது. இந்த கண் திருஷ்டியின் காரணமாக உங்களது குடும்பத்தில் தான் தேவையில்லாத சண்டைகள் உருவாகும். எனவே இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.