அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

Photo of author

By Janani

அட்சய திருதியை நாளான இன்று எப்பாடுபட்டாவது பல்லியை பார்த்து விடுங்கள்..!! பார்த்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா..??

Janani

அட்சய திருதியை நாளான இன்று(30.4.2025) எப்பாடுபட்டாவது உங்கள் வீட்டின் மூலை முடுக்கில் ஒளிந்து இருக்கும் பள்ளியை ஒரு முறை நீங்கள் பார்த்துவிட்டால் போதும், ஏழேழு ஜென்ம பாவங்களும் தீர்ந்துவிடும். பல்லி என்பது அனைத்து வீடுகளிலும் சாதாரணமாக உலாவி வரக்கூடிய ஒரு உயிரினம் தான். ஆனால் இந்த உயிரினத்திற்கும், அட்சய திருதிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திதியை தான், நாம் அட்சய திருதியை நாளாக கொண்டாடுகிறோம். இந்த அட்சய திருதியை நாளில் பல்லிகள் யாருடைய கண்ணிலும் படக்கூடாது என்று வாஸ்து பகவான் கட்டளையிட்டதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. “அட்சய” என்றால் “அழியாமல் வளரக்கூடியது” என்று பொருள். எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற எந்த பொருளை வாங்கினாலும் அது நம்முடைய வாழ்வில் குறையாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் இன்றைய நாளில் புண்ணியம் செய்தால், பல மடங்கு புண்ணியம் நமக்கு வந்து சேரும் என்பதும் உண்மை. இந்த நாளில் தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை காட்டிலும், அதனை மற்றவர்களுக்கு தானம் செய்வதால் மட்டுமே செல்வம் மென்மேலும் பெருகும். அவ்வாறு தங்கத்தை தானம் செய்ய முடியாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். இது உங்களுடைய செல்வத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும்.

இந்த அட்சய திருதியை நாளில் தான் பிரம்மன் இந்த உலகை படைத்தார் என்றும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் தான் மதுரை மீனாட்சி அம்மனை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் எதையும் வாங்க முடியாதவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு ஒரு முழம் பூ வாங்கி போட்டாலே மனம் குளிர்ந்து விடுவார்.

இந்த அட்சய திருதியை நாளில் மண்பானை, துளசி செடி, உப்பு, வெள்ளை நிற பொருட்கள், வெண்கடுகு, பருப்பு வகைகள், காய்கறிகள், நெய், சோழி, சங்கு, ஸ்ரீ சக்கரம், புல்லாங்குழல், விநாயகர் சிலை, மயிலிறகு, வெள்ளியால் செய்யப்பட்ட காமதேனு போன்ற பொருட்களை வாங்கி வைத்தால் செல்வம் பெருகும். மேலும் லட்சுமி கடாட்சம் உருவாகும்.

இந்த அட்சய திருநாளில் பல்லியை மட்டும் உங்களால் பார்க்கவே முடியாது. “பல்லியை எங்களது கண்களுக்கு காட்டுங்கள்” என்று வாஸ்து பகவானிடம் மனதார வேண்டிக் கொண்டு “நாங்கள் செய்த பாவத்திற்கு உண்டான தண்டனையை சிறிது குறையுங்கள்” என்றும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நாளில் பல்லியை நீங்கள் பார்த்து விட்டால் உங்களுடைய பாவம் மற்றும் தரித்திரம் நீங்கி புண்ணியம் வந்து சேரும்.

எனவே இந்த நாளில் ஒருவேளை நீங்கள் பல்லியை பார்த்து விட்டால் தலைவணங்கி பல்லியை வணங்குங்கள். நீங்கள் செய்த பாவங்களை மன்னிக்க வேண்டும் என்று பல்லியிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.