அப்பா விஜயகாந்தை பின் தொடார்ந்து மிகவும் இளமையான வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் விஜய பிரபாகரன். குறிப்பாக விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசியலிலில் இருந்து விலகியிருந்த போது அவரின் மகன் விஜய பிரபாகரனே கட்சி நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டி கட்சி வளர காரணமாக இருந்தார்.
பல மாவட்டங்களுக்கும் சென்று தேமுதிக நிர்வாகிகளிடம் பேசுவது, தேமுதிக மேடைகளில் அரசியல் பேசுவது என அரசியலில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வந்தார். எனவே, கட்சிக்கு அவருக்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என தேமுதிகவினர் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில்தான், இன்று தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தர்மபுரியில் துவங்கியது..
ஆனால், கூட்டம் துவங்குவதற்கு முன்பே தேமுதிக தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதன்படி தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பிரேமலதாவின் சகோதரரும், விஜயகாந்தின் மைத்துனருமான சதீஷ் தேமுதிக பொருளாலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைமையின் இந்த அறிவிப்பு தேமுதிகவினருக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.