உழைப்பாளர் மே 1ம் தேதியை முன்னிட்டு தமிழில் 3 படங்கள் நேற்று வெளியானது. அதில் ஒன்றுதான் கார்த்திக் சூப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவுக்கு கங்குவா படம் கை கொடுக்காத நிலையில் எல்லோரின் கவனமும் ரெட்ரோ படத்தின் மீது இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சூர்யாவும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். ஆனால, கடந்த பல வருடங்களாகவே அவரின் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வரவேற்பை பெறவில்லை.இந்த படம் நேற்று ஒரு நாளில் 20 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ரெட்ரோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதோடு, கோடை விடுமுறை காரணமாக தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் இப்படம் 46 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
நாளை சனி மற்றும் ஞாயிறு கிழமை கிழமை வருவதால் இந்த 2 நாட்களில் இந்த படம் இன்னும் அதிக வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது.