வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…

Photo of author

By அசோக்

வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…

அசோக்

vasishnavi

கோவையில் சமூகசேவை செய்த வந்த வைஷ்ணவி என்கிற இளம்பெண் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என தன்னை மிரட்டுவதாகவும் பகீர் புகாரை அவர் கூறியிருக்கிறார்.

tvk vaishanavi

மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நீயெல்லாம் ஒரு பொண்ணா?. உனக்கெல்லாம் எதுக்கு அரசியல். ஒழுங்கா வீட்டுக்குள்ளயே இரு. அரசியலை உனக்கு என்ன தெரியும் என வசவு வார்த்தைகள் நசுக்கப்படுகிறேன். என்னுடைய மக்கள் பணிக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். மாநாடு, பூத் கமிட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் எனக்கு அழைப்பு இல்லை. இன்று முதல் நான் என்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து முழுமையாக விடுவித்துக்கொள்கிறேன். என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே, தலைமையை சந்திக்க கூட புஸ்ஸு ஆனந்த் தன்னை அனுமதிக்கவில்லை என நடிகர் தாடி பாலாஜி புகார் கூறியிருந்த நிலையில் தற்போது வைஷ்ணவியும் கட்சியிலிருந்து விலகியிருப்பது தவெகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது ‘சகோதரி வைஷ்ணவி உண்மையிலேயே மக்களுக்கு பணியாற்ற விரும்பினால் பாஜகவுக்கு தாராளமாக வரலாம். இங்கு எல்லா வாய்ப்பும் எல்லோருக்கும் கொடுக்கப்படுகிறது. இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் பிரதமர் மோடி சொல்கிறார்’ என கூறியிருக்கிறார்.