தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் நானி. தெலுங்கில் மற்ற ஹீரோக்கள் மசாலா கலந்த, ஹீரோயிசம் இருக்கும் கதைகளில் நடிக்கும்போது நானி மட்டும் நல்ல கதையம்சம் கொண்ட நடிப்புக்கு தீனி போடும் வேடங்களில் நடித்து வருகிறார். ராஜமவுலி இயக்கிய நான் ஈ படம் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானர். மேலும் வெப்பம் என்கிற நேரடி தமிழ் படத்திலும் நானி நடித்திருக்கிறார்.
இவரின் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்களில் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அப்படி வெளியான ஹாய் நானா, கேங்லீடர், ஜெர்சி, தசரா போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, இங்கும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் இவரின் ஹிட் 3 படம் கடந்த 1ம் தேதி வெளியானது. ஏற்கனவே ஹிட் மற்றும் ஹிட் 3 படங்கள் தெலுங்கில் வெளியாகி பெற்ற நிலையில்தான் இப்போது மூன்றாம் பாகம் வெளியானது. இந்த படத்தை சைலேஷ் கோணலு என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரு பேன் இண்டியா படமாக வெளியானது.
இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து 101 கோடி வசூல் செய்திருப்பதாக பட நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.