நடிகர் ஆர்யா சினிமாவில் ஹீரோவா வளர்ந்தபோது ஒருபக்கம் சந்தானம் காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருந்தார். அதாவது இருவருமே ஒரே காலகட்டத்தில் ஒன்றாக வளர்ந்தவர்கள். சூர்யா தனது இரண்டாவது படமான ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடித்தபோது அந்த படத்தில் சந்தானமும் நடித்திருந்தார்.
ஆர்யா பிரபலமான பின் நடித்த ராஜா ராணி, சேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி உள்ளிட்ட பல படங்களிலும் அவருடன் சந்தானம் நடித்தார். இந்த எல்லா படங்களிலுமே சந்தானத்தின் காமெடி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதோடு, இருவரும் நல்ல நண்பர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை ஆர்யாதான் தயாரித்திருக்கிறார்.
இந்த பட விழாவில் பேசிய சந்தானம் ஆர்யாவால் ரஜினியிம் மாட்டிக்கொண்ட சம்பவம் பற்றி பேசியிருக்கிறார். ஒரு கல்லூரியின் கதை படத்தில் நடிக்கும்போதே நக்கலாக என்னை காமெடி சூப்பர்ஸ்டார் என மற்றவர்களிடம் அறிமுகம் செய்வான். அதை அவன் கடைசி வரை விடவில்லை. சேட்டை படத்தில் நடித்த படத்தின் டைட்டில் கார்டிலிலும் என்னை காமெடி சூப்பர்ஸ்டார் என போட்டுவிட்டான்.
லிங்கா படத்தில் நடித்தபோது ரஜினி சார் ‘நீங்க காமெடி சூப்பர்ஸ்டராமே’ எனக்கேட்டார். நானோ, இல்ல சார். அது ஆர்யா அப்படி போடுட்டான் என சொல்ல ‘நீஙக சொல்லாமதான் அவர் அப்படி போட்டாரா?’ எனக்கேட்டார். எதையோ சொல்லி அவரை சமாளித்தேன். இப்படித்தான் ஆர்யா என்ன பல இடங்களில் மாட்டியிருக்கிறேன்’ என பேசியிருக்கிறார்.